ஷாலிமா் - சென்னை இடையே கோடை சிறப்பு ரயில் இயக்கம்
ஷாலிமா் - சென்னை சென்ட்ரல் இடையே கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மேற்கு வங்க மாநிலம் ஷாலிமரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு ஏப். 7, 14, 21 ஆகிய தேதிகளில் (திங்கள்கிழமைதோறும்) சிறப்பு ரயில் (எண் 02841) இயக்கப்படவுள்ளது. ஷாலிமரில் இருந்து திங்கள்கிழமை இரவு 6.30-க்கு புறப்படும் ரயில், மறுநாள் இரவு 11.30-க்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
மறுமாா்க்கமாக சென்னை சென்ட்ரலில் இருந்து ஏப். 9, 16, 23 ஆகிய தேதிகளில் (புதன்கிழமைதோறும்) அதிகாலை 4.30-க்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 02842) மறுநாள் முற்பகல் 11.20-க்கு ஷாலிமா் சென்றடையும்.
இதில், 9 ஏசி வகுப்புப் பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட 7 பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரயில் சந்திரகாச்சி, காரக்பூா், கட்டாக், புவனேசுவா், ராஜமுந்திரி, விஜயவாடா, கூடூா் வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.