கலால் வரியால் பெட்ரோல், டீசல் விலை உயருமா? மத்திய அரசு பதில்
`சவாலுக்குத் தயாரா?' - நீட் தேர்வு விவகாரம், எடப்பாடி பழனிசாமிக்கு சவால் விட்ட முதல்வர் ஸ்டாலின்
ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை திறப்பு விழா, அரசின் புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை முதல்வர் ஸ்டாலின் தலைமையேற்று தொடங்கி வைத்தார். நீட் விவகாரம் குறித்து மேடையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், " முன்னாள் முதல்வர்கள் தலைவர் கலைஞர், அம்மையார் ஜெயலலிதா ஆகியோர் இருந்தவரை தமிழ்நாட்டிற்குள் நீட் தேர்வு நுழையவில்லை. அவர்களின் மறைவுக்குப் பிறகு தான் நீட் தேர்வை இங்கு நுழையவிட்டார்கள்.

பா.ஜ.க - வின் பாதம் தாங்கியாக இருந்து வரும் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தான் நீட் தேர்வைக் கொண்டு வந்தவர்கள். தமிழ்நாட்டு மாணவர்கள் மீது அக்கறை இருப்பது போல நடித்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. பா.ஜ.க - வுடன் கூட்டணி அமைப்பதில் ஆர்வம் காட்டி வரும் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு விலக்கு அளித்தால் தான் பா.ஜ.க கூட்டணியில் அ.தி.மு.க இணையும் என்ற நிபந்தனையை முன்வைக்க முடியுமா ? எடப்பாடி பழனிசாமிக்கு சவால் விட்டு சொல்கிறேன். நிச்சயம் இதை செய்ய மாட்டார். ஏனென்றால் அவருக்கு தமிழ்நாட்டின் நலன் முக்கியமில்லை " என்றார்.