செய்திகள் :

ஒரு சென்ட் நிலம்கூட கிடையாது; கட்சி கட்டடமே வசிப்பிடம் - சிபிஎம் தேசிய பொதுச் செயலாளரான எம்.ஏ.பேபி!

post image

மதுரையில் நடந்த சி.பி.எம் அகில இந்திய மாநாட்டில் புதிய தேசிய செயலாளராக கேரளாவைச் சேர்ந்த எம்.ஏ.பேபி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இ.எம்.எஸ் நம்பூதிரிபாடு-க்கு அடுத்தபடியாக கேரளாவில் இருந்து சி.பி.எம் தேசிய பொதுச்செயலாராக கேரளாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் எம்.ஏ.பேபி. 71 வயது ஆகும் மரியன் அலெக்ஸாண்டர் பேபி என்ற எம்.ஏ.பேபி-க்கு கடந்த 5-ம் தேதி பிறந்தநாள் என்பதால், இந்த பதவி பிறந்தநாள் பரிசு என சிலாகிக்கின்றனர் சி.பி.எம் நிர்வாகிகள்.

1972-ம் ஆண்டு முதல்...

1972-ம் ஆண்டு முதல் சி.பி.எம் உறுப்பினராக உள்ளார். எமெர்ஜென்ஸி காலத்தில் சிறைவாசமும் அனுபவித்துள்ளார். 30 ஆண்டுகளாக சி.பி.எம் மத்திய குழு உறுப்பினராக உள்ளார். 2012-ம் ஆண்டு முதல் பொலிட்பீரோ உறுப்பினராக உள்ளார். தனது 19-ம் வயதில் சி.பி.எம் கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்.எஃப்.ஐ மாநில தலைவராக இருந்தார். அந்த சமயத்தில் எஸ்.எஃப்.ஐ மாநில செயலாளராக கொடியேரி பாலகிருஷ்ணன் இருந்தார். எஸ்.எஃப்.ஐ அகில இந்திய தலைவராகவும், சி.பி.எம் இளைஞரணியான டி.ஒய்.எஃப்.ஐ அகில இந்திய தலைவராகவும் பதவி வகித்துள்ளார் எம்.ஏ.பேபி.

மதுரையில் நடந்த சி.பி.எம் 24-வது தேசிய மாநாட்டில் பினராயி விஜயனுடன் எம்.ஏ.பேபி

40 ஆண்டுக்கு முன்பு எஸ்.எஃப்.ஐ அகில இந்திய தலைவர் பதவியில் இருந்து எம்.ஏ.பேபி மாறியபோது அந்த பதவி சீத்தாராம் யெச்சூரி-க்கு வழங்கப்பட்டது. இப்போது சீத்தாராம் யெச்சூரி மறைவுக்குப்பின் அகில இந்திய பொதுச்செயலாளர் பதவி எம்.ஏ. பேபிக்கு வழங்கப்பட்டுள்ளது.

பள்ளி ஆசிரியரான பி.எம்.அலெக்ஸாண்டர் - லில்லி அலெக்ஸாண்டர் தம்பதியினரின் 8-வது மகன் எம்.ஏ.பேபி. கொல்லம் பிராக்குளம் பகுதியைச் சேர்ந்த எம்.ஏ.பேபி கொல்லம் எஸ்.என் கல்லூரியில் பயின்றார். அரசியலுக்கு வராமல் இருந்தால் ஆசிரியர் ஆகியிருப்பார். எஸ்.எஃப்.ஐ நிர்வாகியாக பணிசெய்தபோது பழக்கமான பெற்றி லூயிஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஒரே மகனான அப்பு என்ற அசோக் ஹிட்டார் இசைக் கலைஞராக உள்ளார். சொந்தமாக ஒரு சென்ட் நிலம்கூட இல்லாமல் எளிமையான வாழ்க்கை வாழும் எம்.ஏ.பேபி திருவனந்தபுரத்தில் உள்ள மாநில சி.பி.எம் அலுவலகமாக ஏ.கே.ஜி செண்டருக்கு எதிர்புறம் உள்ள கட்சி கட்டடத்தில் வசித்துவருகிறார்.

சி.பி.எம் அகில இந்திய பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி

டென்னிஸ், கால்பந்து விளையாட்டுகளின் ரசிகரான எம்.ஏ.பேபி கால்பந்து போட்டிகளை இரவு நீண்டநேரம் விழித்திருந்து பார்க்கும் வழக்கம் கொண்டவராம். எம்.ஏ.பேபி இரண்டுமுறை ராஜ்யசபா எம்.பி-யாக இருந்துள்ளார். கொல்லம் மாவட்டம் குண்டற தொகுதியில் இருந்து இரண்டுமுறை எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் கேரள கல்வித்துறை அமைச்சராகவும் பதவிவகித்துள்ளார். பிடல் காஸ்ட்ரோ உள்ளிட்டவர்களுடன் நட்புபாராட்டியவர் எம்.ஏ.பேபி. சி.பி.எம் கட்சியை கேரளா கட்சியாக மட்டும் சுருக்காமல், தேசிய கட்சியாக நிலைநிறுத்தும் சவால் எம்.ஏ.பேபி முன்னால் உள்ளது.

LPG: சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 50 உயர்வு; மோடி அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை, மத்திய அரசு ரூ. 50 உயர்த்தியிருக்கிறது.மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியின் அறிவிப்பின்படி, நாளை (ஏப்ரல் 8) முதல் இது நடைமுறைக்கு வரு... மேலும் பார்க்க

'அதிமுகவினர் அண்ணன், தம்பி போல உள்ளோம்; இதனால்தான் செங்கோட்டையன் உள்ளே இருந்தார்' - ஓ.எஸ்.மணியன்

அதிமுகவினர் இன்று அவையில் இருந்து வெளிநடப்பு செய்தபோது, செங்கோட்டையன் மட்டும் அவையில் இருந்தது குறித்து முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விளக்கம் அளித்திருக்கிறார். அந்த தியாகி யார்? என்ற பேட்ஜ் அணிந்த ... மேலும் பார்க்க

யார் அந்த தியாகி: "அவருக்கு பட்டம் கொடுத்த நீங்கதான் சொல்லணும்" - TASMAC வழக்கில் CM-க்கு EPS பதிலடி

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று (ஏப்ரல் 7) நடைபெற்ற கூட்டத்தில், டாஸ்மாக் வழக்கு தொடர்பாக `யார் அந்த தியாகி?' என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுப்பினார்.ஆனால், சட்டமன்றத்தில் தொடர... மேலும் பார்க்க

Congress : `அன்று’ விழுத் தொடங்கிய காங்கிரஸ் இன்னும் எழ முடியாமல் திணறுவது ஏன்? - விரிவான அலசல்!

`முன்னொரு காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் என்ற ஒரு கட்சி இருந்ததாகவும், அதைப் பல முக்கிய அரசியல் தலைவர்கள் வழிநடத்தியதாகவும் கேள்விப்பட்டிருக்கிறோம்' என மக்கள் பே... மேலும் பார்க்க

இபிஎஸ் OUT; செங்கோட்டையன் IN; `காலில் விழுந்த EPS' - `பொம்மை முதல்வர்' - சட்டசபையில் நடந்தது என்ன?

தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று (ஏப்ரல் 7) கூடியது. அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் குறித்து கவன ஈர்ப்பு நேரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச எழுந்ததும், சட்டப்பேரவை நேரலை ஒளிபரப... மேலும் பார்க்க

`அந்த தியாகி யார்?' - சட்டப்பேரவைக்கு பேட்ஜ் அணிந்து வந்த அதிமுக எம்.எல்.ஏ-க்கள்; காரணம் என்ன?

தமிழக அரசின் 2025-2026ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை கடந்த மாதம் 14-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். 15-ம் தேதி வேளாண்மை பட்ஜெட்டை வேளாண்மை துறை அமைச்சர் ... மேலும் பார்க்க