லண்டன் செல்கிறார் நிதியமைச்சர்: பிரிட்டனுடன் பொருளாதார பேச்சுவார்த்தை!
மலைமீது எப்படித்தான் செதுக்கினார்களோ! - குடுமியான்மலையில் ஒரு அற்புத அனுபவம் | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
*The world is a book, and those who do not travel read only one page
*To Travel is to Live
*Travelling – it leaves you speechless, then turns you into a storyteller
*We travel not to escape life, but for life not to escape
பயணங்கள்தான் சுற்றுலாவின் ஆன்மா. சுற்றுலா என்பது பயணங்களை வாழ்ந்து பார்ப்பது.
பொன்மொழிகள் கூறுவது போல சிறந்த அனுபவங்களை ஈந்து ஒரு அற்புதமான கதை சொல்லியாக நம்மை உருவாக்குபவை சுற்றுலாக்கள். மன அழுத்தம் தீர மருத்துவர்களே சுற்றுலாக்களைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள்.

நானும் சுற்றுலாவும்:
என்னைப் பொறுத்தவரை சுற்றுலா என்பது ஏதாவது இடங்களைச் சுற்றிப் பார்ப்பது மட்டுமன்றி, பழமையும் பாரம்பரியமுமான இடங்களைப் பார்த்து, நம் முன்னோரை வியத்தலும் சேர்ந்தது.
அவ்வளவு உயரத்தில், பொதுமக்கள் எளிதில் அடையமுடியாத இடத்தில் தஞ்சைக் கோயிலின் கலசத்தில் செதுக்கப்பட்டுள்ள நுண்ணிய வேலைப்பாடுகள் யாருக்காக?
ஒவ்வொரு கோயிலின் தூண்களிலும் சுற்றிப் படர்ந்திருக்கும் கற்பூங்கொடிகளும் மொட்டுகளும் பழங்களும் சர்வ லட்சணம் பொருந்திய சிற்ப மங்கையரும், அசுணமாவும், வாய்க்குள் கல் உருளும் யாளியும் வில்வித்தை வீரனும், காய்த்துக் குலுங்கும் ஆண் பனையும் யார் கண்டு ரசிக்கச் செதுக்கப்பட்டவை?

தஞ்சைப் பெரிய கோவிலின் விமானத்தில் எத்தனை நுணுக்கமான வேலைப்பாடுகள் உள்ளன தெரியுமா? 216 அடியில், அவ்வளவு உயரத்தில், வெறும் கண்களால் அவ்வளவாகப் பார்க்கவியலாத நுட்பச் சித்திரங்கள் எதற்காகச் செதுக்கப்பட்டன? ஒரு வியப்பின் உச்சமான படைப்பில் ஒவ்வொரு மீச்சிறு பரப்பும் கூட விட்டுவைக்கப்படாமல், அத்தனை சீரிய ரசனையின், அழகியலின் வெளிப்பாடாகத் துலங்குகிறது.
கோவிலுக்கு வரும் ஒவ்வொருவரும் ரசித்து மகிழ்ந்து ரசனையெனும் பேரின்ப உலகில் சிறிது நேரமாவது உலாவிச் செல்ல தரப்பட்ட பெருவரம் தான் அது.
வாயிலில் இருக்கும் இருபெரும் துவாரபாலகர்களின் பிரம்மாண்டத்தை காலத்தின் சுவர்களில் உறையச் செய்தவர்கள் எவ்வளவு திறமை பெற்றவர்கள்? சிவனைப் பார்க்க அனுமதிக்கும் அந்த வாயில் காப்பாளர்களின் பெருமை எத்தகையது? அவர்களில் ஒருவரது காலில் மிகப்பெரிய மலைப்பாம்பு ஏதோ ஆபரணம் போலச் சுற்றியிருக்கிறது. அந்தப் பெரும் பாம்பின் வாய்க்குள் அகப்பட்டிருப்பது ஒரு யானை.

துவாரபாலகரோ, ஏதோ ஒரு மிகச்சிறிய துகள் எனக் கருதி அந்தப் பாம்பைக் கண்டுகொள்ளாமல் காவலில் ஆழ்ந்து கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார் எனில், அவரது தோற்றம் வானமும் பூமியும் அளப்பது தானே?
இதைக் கல்லில் வடித்த சிற்பியின் கற்பனையும் படைப்பின் பரிமாணமும் எவ்வளவு வியப்பிற்குரியது? இன்னும் பெருவுடையார் கோவில் பற்றிக் கூற இந்தப் பக்கம்தான் போதுமா? நம் முன்னோர்களின் படைப்பாற்றல் கடல் மை தொட்டு வானில் எழுதப்பட வேண்டிய புகழுடையது. இது போல நம் நாடெங்கும் கொட்டிக் கிடக்கும் எண்ணற்ற அதிசயங்களை - மனித ரசனையின் உச்சத்தைக் கண்டு ரசிப்பது எனக்கு அவ்வளவு பிடிக்கும்.
உள்ளூர் அதிசயங்கள் :
நம் அருகில் பறக்கும் மின்மினியை வியந்து ரசிக்காவிடில் தூரத்து நட்சத்திர ஒளியால் என்ன கண்டுவிடப் போகிறோம்? என் சொந்த மண்ணின் பெருமையை, பாரம்பரியத்தை, அதன் விஸ்தீரணமான பன்முகத்தன்மையை நான் என் குழந்தைகளுக்கு எப்போதும் அறிமுகப்படுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன்.அதைச் சிறப்பாகச் செய்தும் இருக்கிறேன்.

பெரிய மால்களிலும் கேளிக்கை விடுதிகளிலும் நாங்கள் அதிக நேரம் செலவிட்டதேயில்லை. எங்கள் நேரம் தரமாகச் செலவிடப்படுவதில் நான் மிகுந்த கவனம் செலுத்துவேன். அதே சமயம் மகிழ்ந்திருத்தல் என்ற கொள்கைக்கு நான் மிகுந்த நியாயம் செய்திருப்பதாகக் கருதுகிறேன்.
ஒவ்வொரு இடத்திற்குச் செல்லும்போதும் அந்தந்த இடங்களைப் பற்றிய சுவையான செய்திகளை அசைபோட்டபடி தான் கூட்டிச் செல்வோம். எங்கள் புதுக்கோட்டையின் பாரம்பரியச் சிறப்பு மிக்க திருக்கோகர்ணம், சித்தன்னவாசல், ஆவுடையார்கோவில், குடுமியான்மலை, விராலிமலை உள்ளிட்ட அத்தனை இடங்களும் எங்களுக்கு அத்துப்படி. சமீபத்தில் குடுமியான்மலைக்கும் சித்தன்னவாசலுக்கும் சென்றுவந்தோம்.
சித்தன்னவாசல் - சொர்க்க வாசல்:
சித்தன்னவாசல் என் மனதுக்கு அவ்வளவு நெருக்கமானது. மடிந்து சுழன்று அழகு காட்டும் மலை அழகோ அழகு. வரவேற்பு வாயில் தொடங்கி வரிசைகட்டி நிற்கும் மரங்கள் குளுமையோ குளுமை. பெரிய ஆலமரங்களிடம் நீங்கள் கேட்க ஆயிரம் காதல் கதைகள் இருக்கும். மந்திகள் அவற்றுடன் எப்போதும் பேசிக் கொண்டிருக்கும். மலைமீது ஏறிச் சிறிய மண்டபத்தில் கால் வைக்கும்போதே அதன் பழமை சிலிர்க்க வைக்கும். அதன் விதானத்திலிருக்கும் ஓவியங்கள் உயிர்பெறும். காலம் கரைந்திருந்தாலும் கோலம் சிதையாத அழகு.

புதுக்கோட்டையின் பழமைக்கும் தொல்லியல் சிறப்புக்கும் ஒரு சோற்றுப் பதமாக மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக சித்தன்னவாசலைக் கூறலாம்.
சுமார் 1200 ஆண்டுகாலப் பழமை வாய்ந்த அற்புறமான ஓவியங்களையும் சிற்பங்களையும் சுமந்து நிற்கும் இந்த ஊரானது, இயற்கை அழகிலும் அனைவரையும் கவர்ந்திழுக்கக் கூடியது. ஒன்றரைக் கிலோமீட்டர் நீளமுள்ள தொடர்ச்சியான மலைப்பகுதியில் சமணர் படுக்கைகள், சிற்பங்கள், கல்வெட்டுகள் மற்றும் மலையடிவாரத்தில் முதுமக்கள் தாழி ஆகியன வியப்பூட்டுகின்றன. மலையழகும் கலையழகும் மனதைக் கட்டிப்போடுகின்றன.
காலத்தால் கரைக்கப்பட்டது போக எஞ்சியிருக்கும் மலை ஓவியங்களில் துறவிகள் மெளனப் புன்னகையோடு பார்வையாளர்களை வரவேற்கிறார்கள். அன்றுதான் மலர்ந்தது போல அழகிய வண்ணங்கள் காட்டிச் சிரிக்கின்றன பல நூற்றாண்டுகளைக் கடந்த தாமரை மலர்கள். தேவகன்னியர்கள் மாறா இளமையோடு இதயங்களை வெல்லும் சிற்றிதழ் சிரிப்பில் ஓவியங்களில் உறைந்துள்ளனர்.

பல்லுயிர் ஓம்பும் இயற்கை நியதியை ஒரே தடாக ஓவியத்தில் சித்திர மொழியில் பதிந்து வைத்துள்ளனர் நம் முன்னோர்கள்.
நாமும் பல நூறு வருடங்கள் பின்னோக்கிப் பயணம் செய்யும் மாயாவித்தையை இந்த அமைதியான குளிர்ச்சி நிரம்பிய குகை பரிசளிக்கிறது. சமணத் துறவிகள் புதுக்கோட்டையைத் தேர்ந்தெடுத்து , சித்தன்னவாசல் ஓவியங்கள் என்ற வரலாற்றுப் புகழை அள்ளிக் கொடுத்ததில் வியப்பேதுமில்லை.
சமணர் படுக்கைகள் வியப்பூட்டுபவை. கோடை வெயிலிலும் குளிர்ச்சியை அள்ளித் தரும் இடம் அது. அங்கிருந்தபடி தவம் புரிந்த சமணத் துறவிகள் ஞானம் பெற்றதில் வியப்பேதுமில்லை.
குடுமியான்மலை - சிற்பக்கலை அற்புதம்:
மிக அழகான இடத்தில் கோவில் கொண்டு மிக அழகாக அருளிச் செய்கிறார் குடுமியான்மலைநாதர். மலையை ஒட்டிப் பெரிய தாமரைக்குளம். கரையில் சரங்கள் காட்டிச் சுடர் விடும் மஞ்சள் கொன்றை. பழமையும் புதுமையுமாய்க் கலந்த பெருமைமிக்க ஊர். கோயிலின் ஒவ்வொரு தூணிலும் பெருஞ்சிற்பம். அதி அற்புத வேலைப்பாடுகள்.

மிகப்பெரிய மண்டபங்கள். சன்னதிகள் தோறும் அழகும் அருளும் துலங்கும் தெய்வச்சிலைகள். புடைப்புச் சிற்பமாகப் பெரிய விநாயகர். பெரிய தொந்தி, பெரிய மனதும் கொண்டு வரங்கள் அருள்கிறார் இசைக் கல்வெட்டுகளை ரசித்திருக்கும் கணபதி.
வரலாற்றுச் சிறப்புமிக்க இசைக் கல்வெட்டுகள் இவை. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.
மலைமீது எப்படித்தான் செதுக்கினார்களோ என வியப்பூட்டும் அறுபத்துநான்கு நாயன்மார்களின் திருவுருவங்கள் உள்ளன.
அதற்கும் மேலாக உச்சியில் இருக்கிறார் உலகைப் புரந்து காக்கும் சிவபெருமான். இந்தத் திருத்தலத்தில் அவருக்குக் குடுமிநாதர் என்று பெயர். ஊர் எழிலை உச்சியிலிருந்து ரசிக்கலாம்.

குழந்தைகள் விரும்பி ஓடியாடி விளையாட மலையடிவாரம் இருக்கிறது. அமர்ந்து சாப்பிட ஆலமர நிழலும் குளத்தங்கரையும் உண்டு. மகிழ்வாய் எண்ணிப் பார்க்கப் பழமையின் பெருமையிருக்கிறது.எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்பு ஒவ்வொரு அணுவாக ரசித்து மகிழ்ந்து சிற்பிகள் செதுக்கிய சிலைகளுடன் உரையாடுங்கள்.

இனி வாசகர்கள் விகடன் அறிவிக்கும் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம்.
இந்த மாதத்திற்கான தலைப்பு - ‘சுற்றுலா”. சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும்.
வாசகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் அனுப்பப்படும் பயணக் கட்டுரைகளில் சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
பரிசுத்தொகை விவரம்:
முதல் பரிசு : ரூ. 2,500 (2 வெற்றியாளர்கள்)
இரண்டாம் பரிசு : ரூ. 1000 (5 வெற்றியாளர்கள்)
நினைவுப் பரிசு: ₹500 (10 வெற்றியாளர்கள்)
நினைவில் கொள்க:
நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 20, 2025
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.
உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்
விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்
உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது.
கட்டுரையின் தரத்தின் அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
அவை உயிர்பெற்று உங்களிடம் பேசுவதைக் காணலாம். எல்லாவற்றையும் நாங்கள் பார்த்து ரசித்தோம். விமானத்திலோ ரயிலிலோ சென்று பார்ப்பது மட்டுமல்ல. நமது மாவட்டங்களில் உள்ள அழகை, வியப்பைக் கண்டு களிப்பதும் மிக முக்கியம்.
நெடுங்காலத்திற்கு நிலைத்திருக்கும் சாதனைகள் இவை போன்ற கோவில்கள். கட்டிடக் கலை அதிசயங்களை ரசிப்பதே நம் முன்னோர்களின் பண்பாட்டிற்கும் உழைப்பிற்கும் நாம் செய்யும் நன்றியாகும்.
இவை தவிர இயற்கையை ரசித்தல் தனிக்கலை. அது மேல்நிலைத் தியானம். ஆனால் இலகுவானது.
சுற்றுலாக்களை எப்போதும் வகைப்படுத்திக் கொண்டு வகைக்கு ஒன்றாகக் கண்டு களிப்பது என் இயல்பு. அதைக் குழந்தைகளுக்கும் கற்றுத் தந்திருக்கிறேன். அது ஏட்டுக்கல்வியல்ல. வாழும் கலை.

கல்லணைக்குச் சென்றால் அதன் முழு வரலாற்றையும் கூறத் தெரியும். வேளாங்கண்ணி, நாகூர் என்று அது ஒரு வகை மத நல்லிணக்கச் சுற்றுலா. கடல், மலைகள், குகைகள் என்பவை தனிரகமானவை. காடு பார்த்துக் களித்தல் முற்றிலும் வேறு ரகம். ஆனால் எல்லாச் சுற்றுலாக்களும் உணர்த்துவது மனிதர்களையும் இயற்கையையும் நமக்குக் கிடைத்த வாழ்வையும் போற்றக் கற்க வேண்டும் என்பதைத்தான்.
பயணங்களில் மனிதர்கள் படிக்கக் கிடைப்பார்கள். படியுங்கள். அனுபவம் மிகப் பெரிய பாடம்.
-கி.சரஸ்வதி
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.