13,000 ரன்கள் விளாசிய ஒரே இந்தியர்.! டி20-ல் புதிய சாதனை படைத்த விராட் கோலி!
மனிதர்களே இல்லை... பென்குயின்கள் வசிக்கும் தீவுக்கு வரி விதித்த ட்ரம்ப்! - எங்கே தெரியுமா?
பென்குயின்களும், நீர் நாய்களும் வசிக்கும் தீவுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது.
அண்டார்ட்டிகா அருகே தெற்கு பெருங்கடலில் உள்ள ஹெர்ட் மற்றும் மெக் டொனால்ட்ஸ் தீவு ஆஸ்திரேலியாவுக்கு சொந்தமானதாக உள்ளது.
ஆஸ்திரேலியாவிற்கு சொந்தமாக இருந்தாலும், இந்த தீவை அடைய இரண்டு வாரங்கள் பயணம் செய்து பார்வையிட வேண்டும். மக்களே வசிக்காத இந்த தீவுகளை கடல் வழியாக மட்டுமே அடைய முடியும்.

இந்தத் தீவுகள் 65 ஆயிரம் சதுர அடி கிலோமீட்டர் கடல் இருப்புகளை கொண்டுள்ளன, இந்த தீவுக்கு ஆராய்ச்சிக்காக பார்வையிட வருகின்றனர். இங்கு ஒரு நிரந்தர மனித வாழ்விடமே இல்லை.
இந்த தீவில் பென்குயின்களும் நீர் நாய்களும் மட்டுமே வசிக்கின்றன. ஆனாலும் இந்த தீவிற்கு 10% ட்ரம்ப் வரி விதித்துள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு விதிக்கப்பட்ட வரிதான் இந்த தீவுகளுக்கும் விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க தரவுகள் படி கடந்த ஆண்டு இந்த தீவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே எந்த வர்த்தகமும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது