ஆவடி காவல் ஆணையர் வாகனம் விபத்து: போக்குவரத்து புலனாய்வு காவல்துறை விசாரணை
சென்னை: சென்னை, ஆவடி காவல் ஆணையர் சங்கர் ஐபிஎஸ் சென்றுகொண்டிருந்த வாகனத்தின் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இந்த விபத்தில் சிக்கிய இரு காவலர்கள் தனியார் மருத்துவமனையில் லேசான காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நல்வாய்ப்பாக சென்னை பெருநகர ஆவடி காவல் ஆணையர் சங்கர் ஐபிஎஸ் காயமின்றி உயிர் தப்பினார்.
இன்று காலை திருவள்ளூர் மாவட்டம், செம்புலிவரம் அருகே முக்கிய பணியாக சங்கர் ஐபிஎஸ் வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அதிக எடை கொண்ட சரக்கு லாரி ஒன்று சென்னை பெருநகர ஆவடி காவல் ஆணையரின் வாகனத்தின் மீது உரசியதால் விபத்து நேரிட்டது.
இந்த விபத்தில், சென்னை காவல் ஆணையரின் வாகனத்தை இயக்கிய கார் ஓட்டுநரான ஜெயக்குமார் மற்றும் காவலர் மாரிச்செல்வம், ஆகியோர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சென்னை ஆவடி காவல் ஆணையர் சங்கர் ஐபிஎஸ் அவருக்கு எந்த ஒரு காயம் இன்றி உயிர் தப்பினார்
மேலும் இந்த வாகன விபத்து எதிர்பாராத வகையில் நடந்த விபத்தா? அல்லது திட்டம் தீட்டி யாரேனும் சென்னை பெருநகர ஆவடி காவல் ஆணையர் சங்கர் ஐபிஎஸ் அவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் திட்டம் தீட்டினார்களா? என பல கோணங்களில் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.