செய்திகள் :

டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற கோரவில்லை: ரகுபதி

post image

டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற கோரவில்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று (ஏப். 7) சட்டப் பேரவை வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்து அளித்த பேட்டி:

இன்றைய நாள் நிருபர்களைச் சந்தித்த அதிமுக-வின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசு ஏன் உச்ச நீதிமன்றத்தில் டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலங்களுக்கு மாற்ற வேண்டும் என்று கேட்கிறது? உங்களுக்கு பயமா? என்று கேட்டிருக்கிறார். எங்களுக்கு மடியில் கணமும் இல்லை - வழியில் பயமும் இல்லை. எங்களது கவுன்டரை அவர் ஒழுங்காக படித்துப் பார்க்கவில்லை - எங்களது கோரிக்கையையும் அவர் பார்க்கவில்லை.

இன்றைக்கு உயர் நீதிமன்றத்தில் இருக்கக்கூடிய வழக்குகள், மற்ற வழக்குகள், டாஸ்மாக் பொறுத்தவரைக்கும் இருக்கின்ற வழக்குகள் எல்லாம் உச்ச நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட வேண்டும் - உச்சநீதிமன்றத்தில் எல்லா வழக்குகளையும் சேர்த்து ஒன்றாக விசாரியுங்கள் என்றுதான் நாங்கள் கேட்டிருக்கிறோமே தவிர, வேறு மாநிலத்திற்கு சென்று எங்களுடைய வழக்கை விசாரிக்க வேண்டும் என்று நாங்கள் கேட்கவில்லை.

ஆனால், அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் வழக்கை அன்றைக்கு வேறு மாநிலத்திலேயே விசாரிக்க வேண்டும் - தமிழ்நாட்டில் விசாரித்தால் சரியாக இருக்காது என்று வேறு மாநிலத்திற்கு மாற்றப்பட்டது. ஆனால், நாங்கள் வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று அந்த வழக்கைப் பற்றி நாங்கள் கேட்கவே இல்லை. எங்களுடைய கோரிக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்பதுதான். அதை அவர் சரியாக புரிந்து கொள்ளவில்லை - புரிதல் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அடுத்ததாக டாஸ்மாக்கை ரெய்டு பற்றி 2016-21-ஆம் ஆண்டிற்கான பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலும், அதைத்தொடர்ந்து சிலர் சொல்லி அன்றைக்கு டாஸ்மாக்கில் திடீரென்று ரெய்டு நடத்தினார்கள். ஆனால், என்ன தொகை? எவ்வளவு என்று எதுவுமே அவர்கள் வெளியிடவில்லை. என்ன கணக்குகள் கைப்பற்றினோமா? எவ்வளவு தொகை அங்கே முறையீடு செய்யப்பட்டது என்பதெல்லாம் சொல்லவில்லை. அன்றைக்கு ஒருவர் சொன்னார் - பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஆயிரம் கோடி ரூபாய் என்று சொன்னார். அதைத்தான் அடுத்து அமலாக்கத்துறை சொன்னது.

அதாவது அண்ணாமலை என்ன சொன்னாரோ அதையே அமலாக்கத்துறை சொன்னது. அதற்குப் பிறகு தில்லிக்குச் சென்று பார்த்துவிட்டு வந்த பிறகு எடப்பாடி பழனிச்சாமி, அதே ஆயிரம் கோடி என்றார். அதாவது அவர்களுக்கு உள்ள தொடர்பு அதன் மூலமாக தெரியுமே தவிர நிச்சயமாக எங்களுடைய ஆட்சியில் டாஸ்மாக்கில் எந்த முறை கூடும் இல்லை என்பதை எங்களால் நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியும்.

எந்த தவறுக்கும் எங்களுடைய தலைவர் இடம் கொடுக்கவில்லை. முதல்வரோ, அரசோ இடம் கொடுக்கவில்லை என்பதை நாங்கள் வழக்கை அவர்கள் தொடர்ந்தால் வழக்கில் நிரூபிக்க முடியும். அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தான் நாங்கள் அங்கே முன் வைத்தோம் என்பதை தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன்.

அதனால், சட்டப்பேரவையில் டாஸ்மாக்கை பற்றி பேசவில்லை – எங்களை அனுமதிக்கவில்லை என்றெல்லாம் சொல்கிறார். நீதிமன்றத்தில் இருக்கக்கூடிய ஒரு வழக்கைப் பற்றி விசாரிக்கக் கூடாது. உடனே அவர் சொல்கிறார் - நீங்கள் டிரான்ஸ்பர் பெட்டிஷன் போட்டு இருக்கிறீர்கள் என்று சொல்கிறார்.

நாங்கள் ட்ரான்ஸ்ஃபர் பெட்டிஷன் போடவில்லை கவுன்டரில்தான் சொல்லி இருக்கிறோம். இது போன்று ஒரே இடத்தில் உச்ச நீதிமன்றத்தில் அனைத்து வழக்குகளும் விசாரியுங்கள் என்று அந்த அடிப்படையில் தான் இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதையும் படிக்க: பேரவையிலிருந்து அதிமுகவினர் வெளியே(ற்றம்)! செங்கோட்டையன் உள்ளே!

வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? அல்லது மக்களின் வயிறு எரிய வேண்டுமா? - முதல்வர் ஸ்டாலின்

நாட்டு மக்களின் வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? அல்லது மக்களின் வயிறு எரிய வேண்டுமா? என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.நாடு முழுவதும் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.50 உயர்த்தப்படுவதாக... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?

சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி குறித்து வதந்தி பரவிய நிலையில் பள்ளிக்கல்வித்துறை தரப்பிலிருந்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் ஏற்கெனவே திட்ட... மேலும் பார்க்க

வக்ஃப் வாரிய மசோதாவுக்கு எதிராக திமுகவும் உச்சநீதிமன்றத்தில் மனு!

வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக திமுக சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.வக்ஃப் வாரியங்களில் முஸ்லிம் அல்லாத உறுப்பினா்கள் நியமனம், குறைந்தபட்சம் 5 ஆண்டுக... மேலும் பார்க்க

நெல்லையில் அறுந்துகிடந்த மின் கம்பியை மிதித்த ஆறு வயது சிறுவன் பலி!

சாலையில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து ஆறு வயது சிறுவன் பரிதாபமாக பலியானார்.இந்த சம்பவத்துக்கு, மின் ஊழியர்களின் கவனக் குறைவா? என்று துறை ரீதியிலான விசாரணை நடத்த முடிவு செ... மேலும் பார்க்க

ஆவடி காவல் ஆணையர் வாகனம் விபத்து: போக்குவரத்து புலனாய்வு காவல்துறை விசாரணை

சென்னை: சென்னை, ஆவடி காவல் ஆணையர் சங்கர் ஐபிஎஸ் சென்றுகொண்டிருந்த வாகனத்தின் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இந்த விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு போலீசார் தீவிர வ... மேலும் பார்க்க

சீமான் இன்று ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்ட்!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருச்சி சரக டிஐஜி வருண் குமார் தொடர்ந்த வழக்கில் திருச்சி குற்றவியல் நீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது.தன்னையும், தனது குடும்பத்தினரை... மேலும் பார்க்க