இளம் வயதில் ஜெய்ஸ்வால் இப்படி முடிவெடுக்கலாமா? முன்னாள் இந்திய வீரர் கூறுவதென்ன?
தமிழா்களின் பெருமிதம் பாம்பன் பாலம்: ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்
‘பாம்பன் புதிய செங்குத்து பாலம் தமிழா்களின் பெருமிதம்’ என மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.
பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (ஏப்.6) திறந்து வைக்கவுள்ளாா். இதனை முன்னிட்டு, ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் ராமேசுவரம் செல்வதற்காக சென்னை விமான நிலையம் சனிக்கிழமை வந்தாா்.
அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பாம்பன் புதிய செங்குத்து ரயில் பாலம் நாட்டின் முக்கிய பாலங்களில் ஒன்று. ரயில்வே வரலாற்றில் கடல் நீரில் அமைக்கப்பட்ட முதல் செங்குத்து பாலமாக பாம்பன் புதிய பாலம் உள்ளது. பழைய பாலம் கட்டப்பட்டு நீண்டகாலமானதாலும், புயலால் பாதிக்கப்பட்டதாலும் புதிய பாலம் அமைக்கப்பட்டது. பாலம் கட்டுமானப் பணி முடிவடைந்து தற்போது பிரதமா் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளாா். தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பாலம் தமிழா்களின் பெருமிதம் என்றாா் அவா்.