TASMAC வழக்கு: `தமிழ்நாட்டை விட்டு, மற்ற மாநில நீதிமன்றத்தை நாடுவது ஏன்?' - எடப்...
பிரதமர் மோடிக்கு திருவள்ளுவர் சிலையைப் பரிசளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு!
தமிழகம் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு திருவள்ளுவர் உருவச்சிலையை அமைச்சர் தங்கம் தென்னரசு பரிசளித்தார்.
ராமேஸ்வரம் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப். 6) தமிழகம் வந்திருந்தார்.
அவரை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் வரவேற்றனர்.
தமிழர் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் வந்த பிரதமர் மோடி பாம்பன் ரயில் பாலத்தை கொடியசைத்துத் திறந்து வைத்தார்.
பின்னர், பகல் 12.45 மணிக்குமேல் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் தரிசனம் மேற்கொண்டார்.
கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை செய்யப்பட்டு மாலை அணிவித்து தீர்த்தம் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ராமேஸ்வரத்தில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் பலகோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்கவுள்ளார்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமருக்கு தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு திருவள்ளுவர் உருவச்சிலையை பரிசாக வழங்கினார்.
மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் ராமரின் பட்டாபிஷேக ஓவியத்தை பிரதமருக்குப் பரிசளித்தார்.