ரசிகர்களுடன் அடிதடி: பாகிஸ்தான் வீரரை தரதரவென இழுத்துச் சென்ற பாதுகாவலர்!
ஆட்டோகிராஃப் - மறுவெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
இயக்குநர் சேரனின் ஆட்டோகிராஃப் திரைப்படத்தின் மறு வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் சேரன் சொந்தமாகத் தயாரித்து, இயக்கி, நடித்தத் திரைப்படம் ‘ஆட்டோகிராஃப்’. இந்தப் படத்தில் சினேகா, கோபிகா, மல்லிகா, கனிகா, இளவரசு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
பரத்வாஜ் இசையில் உருவான பாடல்கள் இன்றுவரை அனைவராலும் ரசிக்கப்படுகின்றன.
கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான ஆட்டோகிராஃப் சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம், சிறந்த பிண்ணனிப் பாடகர் (சித்ரா - ஒவ்வொருப் பூக்களுமே), சிறந்த பாடலாசிரியர் (பா. விஜய் - ஒவ்வொருப் பூக்களுமே) உள்ளிட்ட 3 பிரிவுகளில் தேசிய விருதுகளை வென்றது.
வெளியானபோது பெரிய வெற்றியைப் பெற்ற இந்தத் திரைப்படம் 21 ஆண்டுகள் கழித்து மறுவெளியீடு செய்யப்படவுள்ளதாக சில வாரங்கள் முன்பு அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், வருகிற மே 16 அன்று ஆட்டோகிராஃப் மறுவெளியீடு செய்யப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குநர் சேரன் இதனை தனது சமூக வலைதளப் பக்கங்களில் உறுதிப்படுத்தியுள்ளார்.