'டெல்லி க்ரைம் பிராஞ்ச்ல இருந்து வரேன்' - கோவையில் சிக்கிய போலி அதிகாரி; அலட்சிய...
”கலெக்டர் என்னோட ரிலேட்டிவ்” - ஆடிட்டரிடம் ரூ.1 கோடி மோசடி; இன்ஸ்பெக்டர் கைதின் பின்னணி என்ன?
தர்மபுரியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டராக இருப்பவர் நெப்போலியன்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ராமசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆடிட்டர் ரவிச்சந்திரன்(68).
கும்பகோணம் அருகே உள்ள குலசேகரநல்லுாரில், கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை மற்றும் பாலம் விரிவாக்கப் பணிகளுக்காக விளை நிலங்களை அரசு கையகப்படுத்தியது.
இதில் ஆடிட்டர் ரவிச்சந்திரனுக்குச் சொந்தமான 80 சென்ட் நிலத்தை அரசு கையகப்படுத்தி இழப்பீடு வழங்கியது. இந்த நிலையில், ரவிச்சந்திரன், தன்னுடைய நிலத்திலிருந்த, 30 தேக்கு மரங்களை முறையான அனுமதி பெறாமல் வெட்டியுள்ளார்.

இது தொடர்பாக அப்பகுதி வி.ஏ.ஓ கொடுத்த புகாரின் அடிப்படையில், பந்தநல்லுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இந்த நிலையில், ரவிச்சந்திரன் சில ஆண்டுகளுக்கு முன்பு, கன்னியாகுமரில் ஏழைகளுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது.
அப்போது அங்கு இன்ஸ்பெக்டராக பணியாற்றிய, நெப்போலியனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தேக்கு மரம் வெட்டிய வழக்கு தொடர்பாக ரவிச்சந்திரன் பேசியிருக்கிறார்.
அப்போது, இந்த வழக்கால் மன உளைச்சலில் இருப்பதாகவும், இதிலிருந்து எப்படியாவது வெளிவர வேண்டும் எனவும் சொல்லியிருக்கிறார்.
இதைப் பயன்படுத்திக் கொண்ட நெப்போலியன், "இது பெரிய விஷயமில்லை. தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் என்னோட ரிலெட்டிவ்தான். இதைப் பேசி முடித்துக் கொள்ளலாம். வழக்கிலிருந்து நான் விடுபட வைக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
நெப்போலியன் சொன்னதை அப்படியே நம்பியிருக்கிறார் ரவிச்சந்திரன். இதைத்தொடர்ந்து, ரவிச்சந்திரனிடம் ரூ.1 கோடி கேட்டுள்ளார். மூன்று தவணையாக, 1 கோடி பணத்தை நெப்போலியனிடம் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது.
ஆனால், சொன்னபடி வழக்கை முடிப்பதற்கான எந்த வேலையும் நடக்கவில்லை. எப்போது கேட்டாலும் கலெக்டர்கிட்ட சொல்லியிருக்கிறேன் என்று சொல்லி ஏமாற்றி வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த ரவிச்சந்திரன், தன்னை நெப்போலியன் ஏமாற்றி பணம் வாங்கி மோசடி செய்துள்ளார் என்பதை உணர்ந்து போலீஸில் புகார் அளித்தார்.
இதைத்தொடர்ந்து, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். நெப்போலியனைக் கையும் களவுமாகப் பிடிக்க ஸ்கெட்ச் போட்ட போலீஸார், ரவிச்சந்திரனிடம் சிலவற்றைச் சொல்லி அது போல் செய்யச் சொல்லியுள்ளனர்.
அதன்படி தொப்பூர் சுங்கச்சாவடி பகுதியில், ரூ.5 லட்சத்தை நெப்போலியனிடம், ரவிச்சந்திரன் கொடுத்திருக்கிறார். அப்போது அவரை போலீஸார் கைது செய்தனர்.
பின்னர் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதில் வரும் 15ம் தேதி வரை நெப்போலியனை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்ட நிலையில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அத்துடன் நெப்போலியனிடமிருந்து ரூ. 1 கோடி பறிமுதல் செய்துள்ளனர்.
இது குறித்து சிலரிடம் விசாரித்தோம். வழக்கிலிருந்து தப்பிக்க வைக்க கலெக்டர் தனக்கு உறவினர் என நம்ப வைத்துத் தான் நெப்போலியன் இதனைச் செய்துள்ளார். இந்த வழக்கில் அவரைக் கைது செய்து பணத்தைப் பறிமுதல் செய்து விட்டோம்.
ஆனால் அவர் இன்னும் பல முறைகேடுகள் செய்திருக்கலாம். எனவே அவர் பணிபுரிந்த கன்னியாகுமரி, கரூர், தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளிலும் விசாரணை மேற்கொள்ளப்படலாம். வங்கிக் கணக்கை முடக்குவதற்கு வாய்ப்புள்ளது" என்று தெரிவித்தனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs