செய்திகள் :

புதுக்கோட்டையில் மர்ம நபர்களால் நடுரோட்டில் இளைஞர் படுகொலை

post image

புதுக்கோட்டை மாவட்டம், மழையூர் கீழப்பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 25) கூலி வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 5) மழையூர் அரசு தொடக்கப்பள்ளியில் இவரது அண்ணன் மகள் ஆண்டு விழாவில் பங்கேற்பதைப் பார்த்துவிட்டு மீண்டும் வீடு திரும்பிய போது கீழப்பட்டி டாஸ்மார்க் கடை அருகில் வரும் பொழுது மர்ம நபர்கள் இவரை மறித்து அரிவாளால் வெட்டி படுகொலை செய்து விட்டுத் தப்பி ஓடிவிட்டனர்.

இது குறித்த தகவல் அறிந்த மழையூர் காவல் நிலைய போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளைஞர் முருகேசனின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வு மேற்கொள்வதற்காகப் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், முருகேசன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கேள்விப்பட்ட அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களும் மலையூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

murder

இது குறித்து, தகவல் அறிந்த புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா சம்பவ இடத்திற்குச் சென்று சாலை மறியல் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விசாரணை மேற்கொண்டார்.

இந்நிலையில், முருகேசனை அரிவாளால் வெட்டி படுகொலை செய்த நபர்களுக்கும், இவருக்கும் ஏற்கனவே முன் விரோதம் உள்ளதா அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

மதுரை: 22 ஆண்டுகளாகத் தொடரும் பழிக்குப்பழி கொலைகள்; அதிர வைக்கும் அடுத்த சாப்டர்; பின்னணி என்ன?

'அடக்க முடியாத கோபத்தைக் கட்டி வை, காலம் உன்னிடம் வரும்போது ஒருவனையும் விடாதே... கருவறு..." - சமீபத்தில் மதுரையில் என்கவுன்டர் செய்யப்பட்ட சுபாஷ் சந்திரபோஸின் நண்பர்கள் முகநூலில் வெளியிட்ட அஞ்சலிக் கு... மேலும் பார்க்க

திருச்சி: விடுதி மாணவர்களுக்குப் பாலியல் தொல்லை; பாதிரியார் உள்ளிட்ட இருவர் கைது; பின்னணி என்ன?

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகில் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதன் அருகிலேயே பள்ளி மாணவர்கள் தங்கும் விடுதி ஒன்றும் உள்ளது. இதில், 110 மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்... மேலும் பார்க்க

”கலெக்டர் என்னோட ரிலேட்டிவ்” - ஆடிட்டரிடம் ரூ.1 கோடி மோசடி; இன்ஸ்பெக்டர் கைதின் பின்னணி என்ன?

தர்மபுரியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டராக இருப்பவர் நெப்போலியன்.தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ராமசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆடிட்டர் ரவிச்சந்திரன்(68... மேலும் பார்க்க

அமெரிக்க பெண் அதிகாரிக்குப் பாலியல் தொல்லை - திருச்சி இன்ஜினீயர் சிக்கிய பின்னணி!

சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் கொடுத்த புகாரில், இந்திய குடிமகன் ஒருவர், அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரை இணையதளத்தில் பின்தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் செய்து வருவதாக குறிப்பிடப்பட்டிருந்தத... மேலும் பார்க்க

சென்னை: தனியாக இருந்த நர்ஸிடம் அத்துமீறல்; பைக்கை வைத்து குற்றவாளியைப் பிடித்த போலீஸ்; என்ன நடந்தது?

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நர்ஸாக பணியாற்றுபவர்கள் அதே பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கி வருகிறார்கள்.ஷிப்ட் அடிப்படையில் நர்ஸ்க... மேலும் பார்க்க

கோவை பெண் மீது தாக்குதல்; தமாகா முன்னாள் கவுன்சிலர் மீது வழக்கு; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

கோவை உருமாண்டம்பாளையம் அருகே உள்ளசாஸ்திரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரம்யா. இவர் தன் வீட்டிலேயே வடகம் தயாரித்து கடைகளுக்கு வியாபாரம் செய்து வருகிறார். அந்தப் பகுதியில் தற்போது பாதாள சாக்கடை அமைக்கும் ப... மேலும் பார்க்க