செய்திகள் :

"ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்று சொன்ன திருமூலர்தான் முதல் கம்யூனிஸ்ட்" - சமுத்திரக்கனி

post image

மதுரையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிசிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டில் சமுத்திரக்கனி கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சியில் பல்வேறு விஷயங்களைப் பேசியிருக்கிறார்.

மேடையில் பேசிய அவர், ''கல்லூரி முடித்துச் சென்னை வந்தபோது நிறைய கம்யூனிஸ்ட் தோழர்களைச் சந்தித்தேன். எங்கள் இயக்குநர் வெற்றி மாறன் சாரைப் பார்க்கும்போது ஒரு சிவப்பு சிந்தனை வரும்.

இயக்குநர் வெற்றி மாறன்
இயக்குநர் வெற்றி மாறன்

'தறியுடன்' என்ற ஒரு நாவல். அதனை சாரின் உதவி இயக்குநர் 'சங்கத்தலைவன்' என்ற தலைப்பில் படமாக இயக்கினார். அதனை வெற்றி மாறன் சார் தயாரித்தார்.

தறித்தொழிலாளர்களின் பிரச்னையை அந்தப் படம் எடுத்துரைத்தது. 'விசாரணை', 'வட சென்னை' போன்ற படங்கள் மூலம் என்னை ஒரு தளத்திற்கு எடுத்துக்கொண்டு சென்றார்.

ஒரு நாள் 'காவல் கோட்டம்' நாவலைப் படித்து வியந்துபோனேன். அந்த எழுத்தாளரைச் சந்தித்துப் பேசினேன். அதன் மூலம் சில விஷயங்கள் தெரிந்துகொள்ள முடிந்தது.

இப்படி என்னைச் சுற்றி இருக்கும் நிறையப் பேர் என் கைகளைப் பிடித்து இந்த சிந்தனையுடன் நகர்த்திக்கொண்டு செல்கிறார்கள்.

எங்கள் துறையில் சிவப்பு சிந்தனையுடன் இருக்கும் இயக்குநர்களைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். 'ஒன்றே குலம், ஒருவனே தேவன்' என்று சொன்ன திருமூலர்தான் முதல் கம்யூனிஸ்ட்.

வர்க்கத்தை ஒழிப்பது, சமூக ஏற்றத்தாழ்வுகளைச் சமம் ஆக்குவதும்தான் ஒரு கம்யூனிச தத்துவம். கம்யூனிஸ்ட் என்றால் பொதுவுடமைவாதி. 'எல்லார்க்கும் எல்லாமும்' கிடைக்க வேண்டும் என்று நினைப்பவன்தான் உண்மையான கம்யூனிஸ்ட்.

சமுத்திரக்கனி

அப்படி என்றால் கடவுளே கம்யூனிஸ்ட்தான். எந்த ஏற்றத் தாழ்வுகளையும், அவர் பார்ப்பதில்லை. சிவப்பு கலரைப் பார்த்தாலே ஒரு பீதி இருக்கும். ஒரு இடத்தில் ஓங்கிப் பேச வேண்டும் என்றால் எனக்குச் சிவப்பு சட்டை போட்டுக்கொள்ள வேண்டும் என்று தோன்றும்.

வலது, இடது என்பதில் எனக்கு நம்பிக்கைக் கிடையாது. தீயில் நல்ல தீ, கெட்ட தீ என்ற ஒன்று கிடையாது. தீ என்றால் அது தீ தான். ஒன்று சேர்வோம், நல்ல மாற்றத்தைக் கொண்டு வருவோம்" என்று சமுத்திரக்கனி பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Dhanush: ``தனுஷ் -ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் விவகாரம்.. பிரச்னை இதுதான்'' - ஆர்.கே.செல்வமணி ஓபன் டாக்

நடிகர் தனுஷ் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் பட நிறுவனத்தில் அட்வான்ஸ் பணத்தைப் பெற்றுக் கொண்டு படத்தில் நடிப்பதற்குத் தேதி கொடுக்காமல் இருக்கிறார் எனச் சில மாதங்களுக்கு முன்பு சர்ச்சை வெடித்திருந்தது.இந்த வ... மேலும் பார்க்க

`அவர் சொல்வது முற்றிலும் தவறு' - பெப்சியை தாண்டி புதிய அமைப்பை உருவாக்க தயாரிப்பாளர் சங்கம் முடிவு

தனுஷ் - ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனத்துக்கு இடையேயான கால்ஷிட் விவகாரம்தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஆர்.கே.செல்வமணிக்கு பலக் கேள்விகளை முன்வைத்து அறிக்கை ஒன்றை... மேலும் பார்க்க

"விடுதலைக்கு முன்பு சினிமா மாணவன்; இப்போது மார்க்சிஸ்ட் மாணவன்" - வெற்றி மாறன் ஓப்பன் டாக்

மதுரையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டில் இயக்குநர் வெற்றி மாறன் கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சியில் பல்வேறு விஷயங்களைப் பேசியிருக்கிறார்.அப்போது இயக்குநர் பாலு மகேந்திரா குற... மேலும் பார்க்க

Good Bad Ugly: `தீனா' வசனம்; `மங்காத்தா கனெக்ட்'; சிம்ரன் சப்ரைஸ் - டிரெய்லர் ஹைலைட்ஸ்!

`குட் பேட் அக்லி' திரைப்படம் இம்மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அஜித் நடித்திருக்கும் இப்படத்தை அவரின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கிறார். Good Bad Ugly Trailer`கிரீடம்... மேலும் பார்க்க

`குழந்தையை அடிப்பது, மேட்ச் பிக்சிங் காட்சிகளில் நடிக்க காரணம் இதுதான்' - நடிகர் மாதவன்

YNOT ஸ்டூடியோஸ் வழங்கும் 'டெஸ்ட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா, மாதவன், சித்தார்த், மற்றும் மீரா ஜாஸ்மின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.YNOT Studio மூலம் ‘தமிழ் படம்’, ‘விக்ரம் வேதா’... மேலும் பார்க்க