செய்திகள் :

பாலியல் வன்கொடுமை வழக்கில் ஜெயின் துறவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

post image

ஜெயின் துறவி சாந்திசாகருக்கு பாலியல் வன்கொடுமை வழக்கில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தின் சூரத் நகரிலுள்ள திமாலியாவாத் பகுதியிலிருக்கும் ஜெயின் ஆலயத்தில் துறவியாக இருந்தவர் சாந்திசாகர் (57).

சாந்திசாகரின் பிரசங்கத்தைப் பார்ப்பதற்காக அந்த ஆலயத்துக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 1 அன்று வதோதராவிலுருந்து ஒரு குடும்பத்தினர் கல்லூரியில் படித்துவந்த தங்களது 19 வயது பெண்ணுடன் சென்றிருந்தனர்.

அப்போது, பிரசங்கம் இரவில்தான் நடக்குமென்று தெரிவித்த சாந்திசாகர் அவர்களை அங்கு தங்குமாறு கூறியிருக்கிறார்.

அந்தக் குடும்பத்தினரிடம் சடங்குகளைச் செய்வதாகக் கூறி அவர்களை சந்தனமரக் கட்டைகளால் சூழப்பட்ட வட்டத்திற்குள் அமரச்செய்த சாந்தி சாகர் மந்திரங்களை உச்சரிக்குமாறும் தன்னுடைய அனுமதியின்றி வெளியே வரக்கூடாது என்றும் கூறினார்.

மேலும், அந்தப் பெண்ணை மட்டுமே தனியே அழைத்துச் சென்ற அவர், தன்னை ஒரு நண்பனைப் போல நினைத்துக் கொண்டு பூஜை செய்வதற்காக நிர்வாணமாக புகைப்படம் எடுத்து அனுப்புமாறு கூறியுள்ளார்.

பின்னர், அந்தப் பெண்ணின் பெற்றோர் மற்றும் சகோதரருக்கு தனித்தனியே அறை அமைத்துக் கொடுத்த சாந்திசாகர் அந்தப் பெண்ணை தனி அறைக்கு அழைத்துச் சென்று “உன் பெற்றோர் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்தாயா? நான் சொல்வதைக் கேட்காவிட்டால் அவர்கள் இறந்துவிடுவார்கள்” எனக் கூறி மிரட்டியிருக்கிறார்.

பின்னர் அந்தப் பெண்ணை அறையில் வைத்து மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார். இதனால், அந்தப் பெண்ணின் பிறப்புறுப்பு மற்றும் வயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் சாந்திசாகர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததை வெளியே கூறியதைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சாந்திசாகர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம், மருத்துவ அறிக்கை, 32 சாட்சிகளின் வாக்குமூலம் ஆகியவை இந்த வழக்கை மேலும் வலுப்படுத்தியது.

இந்த நிலையில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு சூரத் மாவட்ட கூடுதல் நீதிமன்றம் சாந்திசாகருக்கு இன்று 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் சாந்தி சாகர் சிறையில் இருப்பதால் அவருக்கு இன்னும் 2.5 ஆண்டுகள் மட்டுமே சிறைத் தண்டனை மீதமுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | 2,800 கைதிகளுக்கு ஒரே மருத்துவர்: ஹரியாணா சிறையின் அவலநிலை!

ராம நவமி: குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!

ராம நவமி திருநாளையொட்டி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.இது பற்றி பிரதமர் மோடி தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில்,”அனைவருக்கும்... மேலும் பார்க்க

கல்லூரி தேர்வில் ஆர்எஸ்எஸ் பற்றி சர்ச்சை கேள்விகள்: பேராசிரியருக்குத் தடை!

கல்லூரியில் நடைபெற்ற தேர்வில் ஆர்எஸ்எஸ் பற்றிய சர்ச்சையான கேள்விகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து பேராசிரியருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் மீரட் நகரில் சௌத்ரி சரண் சிங் பல்கலைக்கழகத்த... மேலும் பார்க்க

எல்லையில் ஊடுருவிய பாகிஸ்தானியா் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரின் சா்வதேச எல்லைப் பகுதியில் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியரை எல்லைப் பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எஃப்) சுட்டுக் கொன்றனா். இதுகுறித்து பிஎஸ்எஃப் செய்தித் தொடா்பாளா் சனிக்கிழமை... மேலும் பார்க்க

மியான்மருக்கு 442 டன் உணவுப் பொருள்களை வழங்கிய இந்தியா

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மருக்கு இந்திய கடற்படைக் கப்பல் மூலம் அனுப்பிவைக்கப்பட்ட 442 மெட்ரிக் டன் உணவுப் பொருள்கள், அந் நாட்டு அரசிடம் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. மியான்மரின் யாங்கோன் மா... மேலும் பார்க்க

செயற்கை நுண்ணறிவு: ரூ.11,900 கோடி முதலீட்டுடன் 10-ஆவது இடத்தில் இந்தியா!

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தில் ரூ.11,900 கோடி தனியாா் முதலீட்டுடன் உலகளவில் 10-ஆவது இடத்தில் இந்தியா உள்ளதாக ஐ.நா. வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. ‘2025- தொழில்நுட்பம் மற்றும் புதிய... மேலும் பார்க்க

இன்று ராம நவமி திருநாள்: அயோத்தியில் ஏற்பாடுகள் தீவிரம்

ராம நவமி திருநாளையொட்டி, உத்தர பிரதேசம் அயோத்தி நகரில் உள்ள ராமா் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை ஏப். 6 அதிக எண்ணிக்கையில் பக்தா்கள் வருவாா்கள் என்பதால் விரிவான ஏற்பாடுகளை நிா்வாகம் செய்துள்ளது. நாடு முழு... மேலும் பார்க்க