செய்திகள் :

PBKS Vs RR: "எல்லா நாள்களும் ஒரேமாதிரியாக இருக்கப் போவதில்லை" - ஆட்டநாயகன் ஆர்ச்சர்

post image

ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே நேற்று (ஏப்ரல் 5) நடைபெற்ற ஐபிஎல் 50 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, ஜெய்ஸ்வால், ரியான் பராக், கேப்டன் சஞ்சு சாம்சன் ஆகியோரின் சிறப்பான பேட்டிங்கால் 205 ரன்கள் குவித்தது.

ஜெய்ஸ்வால் - சஞ்சு சாம்சன்
ஜெய்ஸ்வால் - சஞ்சு சாம்சன்

அதையடுத்து, களமிறங்கிய பஞ்சாப் அணி, ஆர்ச்சர் வீசிய முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டைப் பறிகொடுத்தது. நடுவில், நேஹல் வதேரா - மேக்ஸ்வெல் கூட்டணி சற்று நம்பிக்கையளித்தாலும் ராஜஸ்தானின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல், 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் மட்டும் அடித்து 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆட்ட நாயகன் விருதை, ராஜஸ்தான் தரப்பில் அபாரமாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகள் வீழ்த்திய ஆர்ச்சர் வென்றார்.

ஆர்ச்சர் - ஜெய்ஸ்வால்
ஆர்ச்சர் - ஜெய்ஸ்வால்

விருது பெற்ற பிறகு பேசிய ஆர்ச்சர், ``வெற்றிக்கு பங்களிப்பதில் மகிழ்ச்சி. இது போன்ற நாள்களில், நல்ல விஷயங்களை அனுபவிக்கிறோம், தவறுகளை முன்னேற்றத்துக்காக ஏற்றுக் கொள்கிறோம். எல்லா நாள்களும் ஒரேமாதிரியாக இருக்கப் போவதில்லை. நம்மைப் போலவே எல்லோருமே கடினமாகப் பயிற்சியில் ஈடுபடுகின்றனர். ஆனால், சில சூழ்நிலைகளில் நாம் அதிர்ஷ்டசாலியாக இருக்கிறோம்" என்று கூறினார்.

Bumrah: "வெல்கம் முஃபாஸா" - RCB-க்கெதிராக களமிறங்கும் பும்ரா? சூடுபிடிக்கும் ஐபில்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ஜஸ்பிரித் பும்ரா, இந்த சீசன் ஐபிஎல்லில் இன்னும் களமிறங்காதது அந்த அணிக்குப் பெரும் பின்னடைவாக இருக்கிறது. மும்பை ரசிகர்களும் பும்ரா எப்போது வருவார் என்... மேலும் பார்க்க

SRH vs GT: `மொதல்ல 200 அடிங்க பாஸ்' - குஜராத்திடம் சைலன்ட் ஆன கம்மின்ஸ் & கோ

ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் குஜராத் அணியும், கடைசி இடத்தில் இருக்கும் ஹைதராபாத் அணியும் ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்று (ஏப்ரல் 6) நேருக்குநேர் களமிறங்கின. கடைசி ... மேலும் பார்க்க

Hemang Badani : 'சிஎஸ்கே வீரர் டு டெல்லி கோச்!' - சேப்பாக்கத்தில் சம்பவம் செய்த தமிழக வீரர் பதானி

'பிளாஷ்பேக்!'சேப்பாக்கத்தில் சென்னை அணியை 15 ஆண்டுகள் கழித்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீழ்த்தியிருக்கிறது. இதில், சுவாரஸ்யமான விஷயம் ஒன்றும் இருக்கிறது. அதாவது, இதற்கு முன் கடைசியாக டெல்லி கேப்பிட்டல... மேலும் பார்க்க

Dhoni : `அடையாளத்தை இழக்காதீர்கள்' - எங்கள் ஹீரோவாகவே ஓய்வை அறிவியுங்கள் தோனி

'சென்னை தோல்வி!'சேப்பாக்கத்தில் நடந்த டெல்லிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி தோற்றிருக்கிறது. தோல்வி என்பதைத் தாண்டி மோசமான தோல்வி, மோசமான அணுகுமுறை. தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் இயன்றவரை போராடும் குணம்... மேலும் பார்க்க