போா்ச்சுகல், ஸ்லோவாகியா நாடுகளுக்கு குடியரசுத் தலைவா் அரசுமுறை பயணம்!
Modi TN Visit: பாம்பன் பாலம் திறப்பு `டு' ராமேஸ்வரம் கோயிலில் தரிசனம் - மோடி விசிட் அப்டேட்ஸ்!
இலங்கை விசிட்டை முடித்துவிட்டு, இன்று மதியம் ராமேஸ்வரம் வருகிறார் பிரதமர் மோடி. ராமநாதசுவாமி கோயிலில் பகல் 12.45 மணியளவில் பிரதமர் மோடி தரிசனம், பூஜை செய்ய உள்ளார். பிரதமர் மோடி வருகையையொட்டி இன்று ராமேஸ்வரம் கோயிலில் தரிசனத்துக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8 முதல் பிற்பகல் 1 மணி வரை பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை. இன்று பிற்பகல் 3.30 முதல் தரிசனம் செய்ய, தீர்த்தத்தில் நீராட பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.




டெல்லிக்கு அ.தி.மு.க தலைவர்கள் படையெடுப்பு, ‘மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு விவகாரங்களில்’ பா.ஜ.க-வுக்கு எதிராக தி.மு.க கூட்டணி போர்க்கொடி... எனத் தமிழக அரசியல் தகித்துக்கொண்டிருக்கிறது. இதற்கிடையில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் மாற்றத்தின் சலசலப்பு. இந்தச் சூழலில், தமிழகத்துக்கு வருகிறார் பிரதமர் மோடி.
ராமேஸ்வரத்தில், பிரதமர் பேசுவதற்கு பிரமாண்ட விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. புதிய பாம்பன் ரயில் பாலத்தைத் திறந்து வைக்கவிருக்கிறார். தமிழ்நாடு - ஆந்திரா எல்லையை இணைக்கும் நான்கு வழிச்சாலை திட்டத்தையும் திறந்து வைக்கிறார்.

இதுதவிர ராமேஸ்வரத்தில் செவ்வாய் ஹோரை சமயத்தில் பூஜைகளைச் செய்யவிருக்கிறார். அரசியல் சந்திப்புகள், வழிபாடு என ராமேஸ்வரம் பயணத்தை முடித்துக்கொண்டு, பிரதமர் மதுரைக்கும் செல்லவிருக்கிறார். அரசியல் வி.ஐ.பி-க்கள் பலரும் பிரதமர் சந்திப்புக்கு நேரம் கேட்டுள்ளனர்.
எனவே, பிரதமரின் தமிழக வருகை அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
