‘இந்த வரலாறு தொடர்கிறது...’ கிண்டலுக்கு ஆளான எஸ். வி. சேகர்!
ராஜபாளையம்: இரண்டு நாளில் 80 பேரைக் கடித்த தெருநாய்கள்- பொதுமக்கள் அச்சம்
ராஜபாளையம் நகராட்சியில் தெரு நாய்கள் தொல்லையால் பெண்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

எனவே, ராஜபாளையம் சுற்றுவட்டாரத்தில் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலை, காந்தி கலை மன்றம், சத்திரப்பட்டி சாலை, சம்பந்தாபுரம் உள்ளிட்ட பகுதியில் சாலையில் நடந்து சென்ற ஆண்கள், பெண்கள் உள்பட அப்பகுதியில் பாதசாரியாக சென்ற பலரையும் தெரு நாய்கள் திடீரென விரட்டி, விரட்டி கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று முன்தினம் 30 பேர், நேற்று 34 பேர் என கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ராஜபாளையம் சுற்றுவட்டாரத்தில் 80 பேர் நாய் கடிக்கு ஆளாகி அந்தந்த பகுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துள்ளனர். இந்த சம்பவம் ராஜபாளையத்தில் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.