இலங்கையில் வாழும் தமிழர்களுக்காக 10,000 வீடுகள்: பிரதமர் மோடி வாக்குறுதி!
இலங்கை தமிழர்களுக்கு 10,000 வீடுகள், சுகாதார உள்கட்டமைப்புகள் கட்டித் தரப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை(ஏப். 5) வாக்குறுதி அளித்துள்ளார்.
தாய்லாந்தில் ‘பிம்ஸ்டெக்’ உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமா் நரேந்திர மோடி, பின்னா் அங்கிருந்து இலங்கைக்கு வெள்ளிக்கிழமை இரவு சென்றடைந்தாா். மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இலங்கை சென்றுள்ள பிரதமா் மோடி, அந்நாட்டு அதிபா் அநுர குமார திசாநாயக மற்றும் பிரதமா் ஹரிணி அமரசூரிய ஆகியோரை சனிக்கிழமை (ஏப்.5) சந்தித்து இருதரப்பு உறவு குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொண்டுள்ளாா்.
இந்த நிலையில், தமது இலங்கை பயணம் குறித்து பல்வேறு பதிவுகளை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வரும் பிரதமர் மோடி, அதில், இலங்கை தமிழர்களுக்கு 10,000 வீடுகள், சுகாதார உள்கட்டமைப்புகள் கட்டித் தரப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.
இதையும் படிக்க:இந்திய தமிழர்களின் கோரிக்கையை இலங்கை நிறைவேற்றும் என நம்புகிறேன்: பிரதமர் மோடி