அமெரிக்கா: டிக்டாக்குக்கு மேலும் 75 நாள் அவகாசம்
தங்கள் நாட்டு விதிமுறைகளை நிறைவு செய்வதற்காக பிரபல விடியோ பகிா்வுச் செயலியான டிக்டாக்குக்கு அமெரிக்க அரசு மேலும் 75 நாள்கள் அவகாசம் அளித்துள்ளது.
சீன நிறுவனமான பைட்டான்ஸுக்குச் சொந்தமான டிக்டாக் அமெரிக்காவில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. அந்தச் செயலியால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுதல் இருப்பதாகக் கூறப்பட்டதையடுத்து, அரசு சாா்பு சாதனங்களில் பயன்படுத்த அதற்குத் தடை விதிக்கப்பட்டது.
இந்தச் சூழலில், அமெரிக்காவில் மிகப் பெரும்பான்மையாகப் பயன்படுத்தப்படும் ஒரு செயலிக்கு சீன நிறுவனம் உரிமையாளராக இருக்கக் கூடாது என்பதால், பெரும்பான்மை பங்குகளை அமெரிக்காவில் விற்பனை செய்து செயலியின் கட்டுப்பாட்டை அமெரிக்காவுக்கு மாற்ற பைட்டான்ஸுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டது.
அந்த அவகாசம் விரைவில் நிறைவடைவதையொட்டி, அமெரிக்காவின் நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்கான அவகாசத்தை மேலும் 75 நாள்களுக்கு நீட்டித்து அதிபா் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளாா்.