ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை: துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை!
ஆர்ஜென்டீனாவில் நடைபெறும் சா்வதேச துப்பாக்கிச் சுடுதல் சம்மேளனத்தின் (ஐஎஸ்எஸ்எஃப்) உலகக் கோப்பையில் இந்தியாவின் சிஃப்ட் கௌர் சர்மா 50மீ. 3 பொசிஷன் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
23 வயதாகும் சிஃப்ட் கௌர் சர்மா தனது முதல் தங்கத்தை வென்றுள்ளார்.
ஆர்ஜென்டீனாவில் நடைபெறும் இந்த உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு இது முதல் தங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
3 பொசிஷன்களிலும் நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதலில் 458.6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார் இந்தியாவின் சிஃப்ட் கௌர் சர்மா.
2ஆவது, 3ஆவது இடங்கள் முறையே ஜெர்மனி, கஜகஸ்தானைச் சேர்ந்த வீராங்கனைகள் அனிதா மன்கோல்ட், அரினா அல்டுகோவா பெற்றார்கள்.
கஜகஸ்தானைச் சேர்ந்த அரினா அல்டுகோவா ஜூனியர் உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்றவர் என்பது கவனிக்கத்தக்கது.
ஆண்கள் பிரிவில் 50 மீ. துப்பாக்கிச் சுடுதலில் வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது.
GOLD!!! A brilliant come from behind win by @SiftSamra in the women’s 3P at the @issf_official World Cup in Argentina. The world record holder shoots 458.6 in the final for her first ind ISSF & India’s first of the tournament! #ISSFWorldCup#IndianShootingpic.twitter.com/wKSPjvTTiz
— NRAI (@OfficialNRAI) April 4, 2025