பாம்பன் பாலத்தில் ரயில்வே அமைச்சர் திடீர் ஆய்வு!
ராமேசுவரம்: பாம்பன் பாலத்தில் ரயில்வே அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் சனிக்கிழமை(ஏப். 5) இரவு ஆய்வு மேற்கொண்டார்.
பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் நரேந்திர மோடி, நாளை தமிழகம் வருகைதர உள்ளார். இந்த நிலையில், அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ், அமைச்சர் எல். முருகன் ஆகியோர் பாம்பன் பாலத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.