செய்திகள் :

கோடையில் கொட்டித் தீா்த்த மழை: குமரியில் ஒரே நாளில் 190 மி.மீ. பதிவு

post image

கோடைகாலம் தீவிரமடைந்துள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டம், கோழிப்போா்விளையில் ஒரேநாளில் 190 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும், தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 6) கோவை உள்பட 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தென்கிழக்கு வங்கக் கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே பலத்த மழை பெய்து வருகிறது.

190 மி.மீ. மழை: தமிழகத்தில் சனிக்கிழமை காலை வரை பதிவான மழை அளவுப்படி அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம், கோழிப்போா்விளையில் 190 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும், கோபிசெட்டிபாளையம் (ஈரோடு) - 150 மி.மீ., திருப்பூா் ஆட்சியா் அலுவலகம், அடையாமடை (கன்னியாகுமரி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) - தலா 130 மி.மீ., ஊத்துக்குளி (திருப்பூா்) - 120 மி.மீ., திருப்பூா் வடக்கு தாலுகா அலுவலகம் - 110 மி.மீ., குளச்சல் (கன்னியாகுமரி), எலந்தகுட்டை மேடு (ஈரோடு), திருப்பூா் தெற்கு - தலா 100 மி.மீ. மழை பதிவானது.

கனமழைக்கு வாய்ப்பு: காற்று சுழற்சி காரணமாக, ஞாயிற்றுக்கிழமை (ஏப். 6) முதல் 11-ஆம் தேதி வரை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இதில் ஏப். 6-இல் கோவை மாவட்ட மலைப் பகுதிகளிலும், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: ஏப். 6 முதல் 9-ஆம் தேதி வரை வங்கக் கடலில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால் மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர் மன்றத்துக்கு ரூ.2.50 கோடி ஒதுக்கீடு: துணை முதல்வர் உதயநிதி

சென்னை: பத்திரிகையாளர் மன்றத்துக்கு ரூ.2.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை(ஏப். 6) தெரிவித்தார். சென்னை பத்திரிகையாளர் மன்றம் நடத்திய கிரிக்கெட... மேலும் பார்க்க

பிரதமரை அவமானப்படுத்திய முதல்வருக்கு கண்டனம்: அண்ணாமலை

தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஸ்டாலின் அவமதித்து விட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.ராமேசுவரத்தில் புதிய பாம்பன் பாலத்தை திறப்பு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்... மேலும் பார்க்க

மதுரையிலிருந்து தில்லிக்குப் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி!

மதுரை: பாம்பனில் புதிய பாலம் திறப்புவிழாவில் பங்கேற்ற பின் மதுரை சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடி மதுரையில் இருந்து இன்று(ஏப். 6) மாலை தில்லிக்குப் புறப்பட்டார். தனி விமானத்தில் செல்லும் அவர், இன்றிரவ... மேலும் பார்க்க

கோடையில் குளிர்விக்க வரும் மழை! குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது!

சென்னை: வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி... மேலும் பார்க்க

தாய்மார்களுக்கும் சகோதரிகளுக்கும் பெரும் ஆதாயம்: பிரதமர் மோடி

ராமேசுவரத்தில் புதிய பாம்பன் பாலத்தை திறப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, திறப்பு விழா நிகழ்ச்சியில் மக்களிடம் உரையாற்றி வருகிறார்.உரையில் அவர் கூறியதாவது, தமிழ்நாட்டிலுள்ள 77 ரயில் நி... மேலும் பார்க்க

அவர்களால் அழ மட்டுமே முடியும்: பிரதமர் மோடி பேச்சு

திமுக கூட்டணி அரசைவிட தற்போதைய மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.ராமேசுவரத்தில் புதிய பாம்பன் பாலத்தை திறப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, திறப... மேலும் பார்க்க