செய்திகள் :

அமெரிக்க பெண் அதிகாரிக்குப் பாலியல் தொல்லை - திருச்சி இன்ஜினீயர் சிக்கிய பின்னணி!

post image

சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் கொடுத்த புகாரில், இந்திய குடிமகன் ஒருவர், அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரை இணையதளத்தில் பின்தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் செய்து வருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் மேனகா தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீஸார் விசாரணை நடத்தினர். அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணுக்கு சமூகவலைதளங்கள் மூலம்தான் பாலியல் தொல்லை கொடுத்து வந்தது திருச்சியைச் சேர்ந்த 37 வயதான கிஃப்ட் ஜேசுபாலன் செல்வநாயகம் எனத் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். இந்தக் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய செல்போன், லேப்டாப் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

லேப் டாப், செல்போன்

இது குறித்து சைபர் க்ரைம் போலீஸார் கூறுகையில், ``கைதுசெய்யப்பட்ட கிஃப்ட் ஜேசுபாலன், திருச்சியைச் சேர்ந்தவர். இவரின் அப்பா ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. இவர் கோவையில் இன்ஜினீயரிங் முடித்துவிட்டு வேலைக்கு எதுவும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்திருக்கிறார். அதனால் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருந்திருக்கிறார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு இவரின் அப்பாவும் இறந்துவிட்டார். அதனால் வீட்டில் வயதான அம்மாவுடன் தனியாக வசித்து வந்திருக்கிறார். ஒய்வூதியம் மூலம் வாழ்ந்து வந்த கிஃப்ட் ஜேசுபாலனின் லைஃப் ஸ்டைல் கொஞ்சம் கொஞ்சமாக மாறியிருக்கிறது. சமூக வலைதளங்களில் ஆபாச வீடியோக்களை அதிகளவில் பார்த்து அதற்கு ஒருகட்டத்தில் அடிமையாகியிருக்கிறார். இந்தச் சமயத்தில்தான் அமெரிக்காவில் உள்ள நிறுவனத்தில் தலைமை பதவியிலிருக்கும் பெண் ஒருவரின் சமூக வலைதளத்தை கிஃப்ட் ஜேசுபாலன் பாலோ செய்து வந்திருக்கிறார். கடந்த 5 ஆண்டுகளாக அந்த அமெரிக்க பெண் அதிகாரிக்கு ஆபாச வீடியோ மற்றும் பாலியல் ரீதியான மெசேஜை அனுப்பி வந்திருக்கிறார். அதை நிராகரித்து வந்த பெண் அதிகாரி ஒரு கட்டத்துக்கு மேல் பொறுமையை இழந்த அவர், அமெரிக்க தூதரகத்துக்கு தகவல் கொடுத்திருக்கிறார். அதன் பிறகுதான் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் மூலம் எங்களுக்கு புகார் வந்தது. ஐபி அட்ரஸ் மூலம் கிஃப்ட் ஜேசுபாலனைக் கைது செய்திருக்கிறோம்" என்றனர்.

தென்காசி அருகே காரில் கஞ்சா கடத்தல்; பிரபல கஞ்சா ரவுடி கைது!

தென்காசி மாவட்டம் முழுவதும் கஞ்சாவிற்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து புளியங்குடி துணை காவல் கண்காணிப்பாளர் மீனாட்சிநாதன் ம... மேலும் பார்க்க

ராஜபாளையம்: `9-ம்வகுப்பு மாணவர் தூக்கிட்டு மரணம்' - போலீஸார் விசாரணை!

ராஜபாளையத்தில் 9-ம்வகுப்பு பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ரயில்வே பாலம் அருகே உள்ள ஸ்ரீரங்கபாளையம் தெருவைச... மேலும் பார்க்க

போக்சோ வழக்கு: பிரபல மத போதகர் தலைமறைவு.. கோவையில் நடந்தது என்ன?

கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் ஜெபராஜ் (வயது 37). இவர் காந்திபுரம் பகுதியில் உள்ள ஜெப கூடத்தில் மத போதகராக உள்ளார். மேலும் இவர் தன்னுடைய இசைக் கச்சேரிகள் மூலம் கிறிஸ்துவ சமுதாயத்தில் நன்... மேலும் பார்க்க

தண்ணீர் பேரலுக்குள் 6 மாத குழந்தை மரணம்; தாயிடம் போலீஸார் தீவிர விசாரணை! - நடந்தது என்ன?

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே உள்ள குளவாய்பட்டியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது: 29). இவர், மகராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு குளவாய்ப... மேலும் பார்க்க

குடும்பத் தகராறில் மனைவியை எரித்துக் கொன்ற போதை ஆசாமி - மணப்பாறையில் அதிர்ச்சி சம்பவம்!

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கே.பெரியபட்டி ஊராட்சி மாலைமடைப்பட்டியைச் சோ்ந்தவா் பொன்னகவுண்டா் மகன் சின்னதம்பி (வயது: 62). இவரது மனைவி செல்லம்மாள் (வயது: 48). இவா்களது கூட்டு நிலத்தை தமிழ்நாடு... மேலும் பார்க்க

கடலூர்: மூன்று முறை கருக்கலைப்பு… ஆபாசமாகப் பேசி, காதலிக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது!

கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த விசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார். 32 வயதான இவர் அதே பகுதியைச் சேர்ந்த சாந்தி (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) என்ற இளம்பெண்னை இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தி... மேலும் பார்க்க