தேசிய தொழில்நுட்ப ஜவுளித் திட்டத்தின் கீழ் புதுமையான சுயசாா்பு தீ பாதுகாப்பு உடை
8 மாதங்கள் விண்வெளியில்... ரஷிய, அமெரிக்க வீரர்களுடன் புறப்பட்ட சோயுஸ் விண்கலம்!
ரஷியாவின் ‘சோயுஸ் எம்எஸ்-27’ விண்கலம் செவ்வாய்க்கிழமை(ஏப். 8) காலை 11 மணியளவில்(இந்திய நேரப்படி) கஸக்ஸ்தானின் பைக்கோநூர் காஸ்மோடிரோம் ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. அதில் ரஷியவைச் சேர்ந்த செர்கே ரைஸிகோவ், அலெக்ஸே ஸப்ரிட்ஸ்கீ இருவர், அமெரிக்காவை சேர்ந்த ஜானி கிம் என மொத்தம் 3 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
அவர்கள் அனைவரும் இன்று மாலை 3 மணியளவில் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து, அவர்கள் சுமார் 8 மாத காலம் அங்கு தங்கியிருந்து ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பரில் அவர்கள் பூமிக்கு திரும்ப உள்ளனர்.