கோவை, நீலகிரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழை
தமிழகத்தில், கோவை, நீலகிரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் கனமழையும், ஒரு சில மாவட்டங்களில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, தேனி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையும், நாளை 5 மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை, தமிழகத்தில் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், கடந்த சில வாரங்களாக கோடை வெப்பம் வாட்டி வந்த நிலையில், பல்வேறு மாவட்டங்களிலும் மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
அதுபோல, ஏப்ரல் 7 முதல் ஏப். 11 வரை தமிழகத்தல் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும், சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.