புதுச்சேரியில் சுற்றுலா மிதிவண்டி நிறுவனத்தில் அமலாக்கத் துறையினா் சோதனை! - ரூ.1...
அமெரிக்க வரி விதிப்பு கொள்கையால் தமிழ்நாட்டிற்கு இருக்காது: அமைச்சர் டி. ஆர்.பி.ராஜா
அமெரிக்க வரி விதிப்பு கொள்கையால் எந்த பாதிப்பும் தமிழ்நாட்டிற்கு இருக்காது என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திராவிட நாயகன் திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது. பொருளாதாரத்தில் 9.69 சதவீதம் என்ற உச்சத்தை தமிழ்நாடு தொட்டுள்ளதாகவும், அனைத்து துறைகள், அனைத்துப் பகுதிகள் வளர்ச்சி அடைந்திட வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டதால் இந்த இலக்கை அடைந்துள்ளோம். இந்தியாவின் மிக பிரமாண்டமான பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு நம்பர் 1 இடத்தில் உள்ளது.
அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகள் இல்லாத வளர்ச்சியை கடந்த 4 ஆண்டுகளில் நம் முதல்வர் பெற்றுத் தந்துள்ளார். முதல்வருக்கு நாம் நன்றியை கூற வேண்டும். கரோனா காலம் தாண்டி, அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகள் தேக்கம் அனைத்தையும் மீறி கடந்த 4 ஆண்டுகளில் இந்த வளர்ச்சி அடைந்துள்ளோம். மத்திய அரசின் அரவணைப்பில் உள்ள மாநிலங்களை விட தமிழ்நாடு அதிக வளர்ச்சி அடைந்துள்ளது. மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிகாமல் செயல்பட்டால் நாம் இன்னும் அதிகமாக வளர்ச்சி அடைந்து இருக்கலாம்.
சத்தீஸ்கரின் 86 மாவோயிஸ்டுகள் தெலங்கானாவில் சரண்!
தமிழ்நாட்டிற்க்கு சரியாக தர வேண்டியதை மத்திய அரசு கொடுத்தால் நாம் வளர்ச்சி இன்னும் சிறப்பாக இருக்கும். அமெரிக்க வரி விதிப்பு தொடர்பாக இன்னும் முழுமையாக புரிந்துகொள்ள முடியவில்லை. அந்த தாக்கம் காரணமாக சேவை துறை உள்ளிட்ட துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. அதை அனைத்தையும் கருத்தில் கொண்டு நம் முதல்வர் சிந்திப்பதால்தான் நாம் சரியான பாதையில் சென்று கொண்டு இருக்கிறோம். அமெரிக்க வரி விதிப்பு கொள்கையால் எந்த பாதிப்பும் தமிழ்நாட்டிற்கு இருக்காது என்றார்.