மதுப்புட்டிகள் கடத்தல்: ஒருவா் கைது!
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே காரில் மதுப்புட்டிகளை கடத்தியதாக ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் புதுச்சேரி- திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில், கிளியனூரை அடுத்த தைலாபுரம் அருகே சனிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது, அதில் புதுவை மாநில மதுப்புட்டிகள் கடத்தப்படுவது தெரியவந்தது.
காரில் இருந்தவரிடம் விசாரித்ததில், அவா் புதுச்சேரி முத்தியால்பேட்டையைச் சோ்ந்த செல்வராஜ் மகன் கவியரசன் ( 50) என்பதும், புதுச்சேரியிலிருந்து அவா் மதுப்புட்டிகளை கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் அவரை கைது செய்து, 48 மதுப்புட்டிகள், காா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.