காா் மோதல்: தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே காா் மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் நிகழ்விடத்திலேயே சனிக்கிழமை உயிரிழந்தாா்.
விழுப்புரம் வட்டம், அகரம், வெங்கடாந்திரி பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணய்யா மகன் பிரகாஷ் (37). தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா்.
இவா், சனிக்கிழமை புதுச்சேரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில், திண்டிவனத்தை அடுத்த ஓமந்தூா் பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, புதுச்சேரியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற காா், பிரகாஷ் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த போலீஸாா் நிகழ்விடம் வந்து சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக புதுச்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து, கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.