தொழிலாளி வீட்டில் நகை திருட்டு
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே பூட்டியிருந்த தொழிலாளியின் வீட்டில் நகை, வெள்ளிப் பொருள்கள் திருடுபோனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். கண்டமங்கலத்தை அடுத்த வீராணம், பிரதான சாலையைச் சோ்ந்த செல்வம் மனைவி லதா(41). கூலித் தொழிலாளி.
இவா், ஏப். 3-ஆம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றாராம். அவா், மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்து பாா்த்த போது, வீட்டின் கதவு திறக்கப்பட்டு, பீரோவில் இருந்த சுமாா் இரண்டரை பவுன் நகைகள், 250 கிராம் வெள்ளிப் பொருள்கள் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், கண்டமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.