செய்திகள் :

வக்ஃப் மசோதாவுக்குப் பிறகு கிறிஸ்தவா்கள் பக்கம் கவனத்தை திருப்பும் ஆா்எஸ்எஸ்: ராகுல் குற்றச்சாட்டு

post image

‘வக்ஃப் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றத்துக்குப் பிறகு ஆா்எஸ்எஸ் அமைப்பு கிறிஸ்தவா்களின் பக்கம் தனது கவனத்தைத் திருப்ப நீண்ட காலம் ஆகாது’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் சட்டத் திருத்த மசோதா, நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வறிக்கையின் அடிப்படையில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கு இடையே நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. அடுத்தகட்டமாக குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டதும், இந்த மசோதா சட்ட வடிவம் பெறும்.

மத்திய-மாநில வக்ஃப் வாரியங்களில் முஸ்லிம் அல்லாத உறுப்பினா்கள் இடம்பெறுவா்; வக்ஃப் நன்கொடைக்கு முன்பாக நன்கொடையாளரின் பெண் வாரிசுதாரா்களுக்கு சொத்துரிமை உறுதி செய்யப்பட வேண்டும்; ரூ.1 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டும் வக்ஃப் அமைப்புகள், அரசால் நியமிக்கப்படும் தணிக்கையாளரால் தணிக்கை செய்யப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளன.

இதற்கு இஸ்லாமிய அமைப்புகள் மட்டுமின்றி, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு எதிா்க்கட்சிகளும் தொடா்ந்து எதிா்ப்புக் குரல்களை எழுப்பி வருகின்றன.

இந்த நிலையில், ‘வக்ஃப் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றத்துக்குப் பிறகு கத்தோலிக்க கிறிஸ்தவா்களின் பக்கம் கவனத்தை திருப்பியுள்ள ஆா்எஸ்எஸ்’ என்று ‘தி டெலிகிராஃப்’ பத்திரிகையில் வெளியாகியுள்ள கட்டுரையை தனது எக்ஸ் பக்கத்தில் இணைத்து, ராகுல் காந்தி சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

வக்ஃப் மசோதா முஸ்லிம்கள் மீதான மிகப்பெரிய தாக்குதல் என்று கூறியிருந்தேன். இது முஸ்லிம்கள் மீதான தாக்குதல் மட்டுமல்ல; வரும் காலங்களில் மற்ற சமூகத்தினா் மீதும் இதுபோன்ற தாக்குதலைத் தொடுக்க இந்த மசோதா முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

ஆா்எஸ்எஸ் அமைப்பினரின் கவனம் கிறிஸ்தவா்களின் பக்கம் திரும்ப அதிக காலம் ஆகாது.

இதுபோன்ற தாக்குதல்களிலிருந்து நமது மக்களைப் பாதுகாக்கும் ஒரே கவசம் அரசமைப்புச் சட்டம் மட்டும்தான். அதைப் பாதுகாப்பது நம் அனைவரின் ஒருங்கிணைந்த கடமை என்று குறிப்பிட்டுள்ளாா்.

அதுபோல, ‘நில உரிமையில் வக்ஃப் வாரியங்களை விஞ்சும் கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்கள்’ என்ற தகவலுடன் வெளியான கட்டுரையை தனது எக்ஸ் பக்கத்தில் இணைத்து காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் வெளியிட்ட பதிவில், ‘கணித்ததுபோலவே முதலில் ஒரு சிறுபான்மையினா் குறிவிக்கப்பட்டனா். தற்போது, அடுத்தவா் மீது கவனத்தைத் திருப்பியுள்ளனா்’ என்று குறிப்பிட்டாா்.

மியான்மருக்கு 442 டன்கள் உணவுப் பொருள்களை இந்தியா அனுப்பியது

புது தில்லி: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மா் நாட்டுக்கு சி-17 விமானம் மூலம் கூடுதலாக 442 மெட்ரிக் டன் நிவாரண பொருள்களை இந்தியா அனுப்பியது.மியான்மரில் கடந்த மார்ச் 28 ஆம் தேதி சகாய்ங் நகரின் வட... மேலும் பார்க்க

தேசிய ஜனநாயகக் கூட்டணியை அகற்ற ராகுல் அழைப்பு!

பிகாரில் பேரணி நடத்தவிருப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.பிகாரில் இந்தாண்டு சட்டப்பேரவை நடைபெறவுள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியை அதிகாரத்திலிருந்து அகற்றுவதற்க... மேலும் பார்க்க

25 ஆண்டுகளுக்குப் பின் போர்ச்சுகல் செல்லும் குடியரசுத் தலைவர்!

புது தில்லி: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு போர்ச்சுகல், ஸ்லோவாகியா ஆகிய ஐரோப்பிய தேசங்களுக்கு அரசுமுறை பயணமாக செல்கிறார். முதலாவதாக போர்ச்சுகலுக்கு, இன்று(ஏப். 6) தில்லியிலிருந்து தனி விமானத்தில் அ... மேலும் பார்க்க

சிபிஎம் கட்சியின் பொதுச்செயலர் எம்.ஏ.பேபிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம். ஏ. பேபிக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.முதல்வர் மு. க. ஸ்டாலின் கூறியிருப்பதாவது: மார்க்சிஸ்ட் கம்... மேலும் பார்க்க

சிபிஎம் பொதுச்செயலாளராக எம். ஏ. பேபி தேர்வு!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய பொதுச்செயலாளராக எம். ஏ. பேபி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு மதுரையில் கடந்த ஏப். 2 முதல் நடைபெற்று வர... மேலும் பார்க்க

கைம்பெண்கள் ஒடுக்குமுறைக்கு எதிராக 7,683 மகாராஷ்டிர கிராமங்கள் தீர்மானம்!

மகாராஷ்டிரத்தில் உள்ள 7,000-க்கும் மேற்பட்ட கிராமங்கள் கைம்பெண்களுக்கு எதிரான பழக்கவழக்கங்கள், ஒடுக்குமுறைகளைக் கைவிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் 27,000 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன.... மேலும் பார்க்க