Hemang Badani : 'சிஎஸ்கே வீரர் டு டெல்லி கோச்!' - சேப்பாக்கத்தில் சம்பவம் செய்த ...
குற்றாலம் கோயிலில் சித்திரை விஷு திருவிழா கொடியேற்றம்!
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருள்மிகு குற்றாலநாதசுவாமி கோயிலில் சித்திரை விஷு திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதை முன்னிட்டு அதிகாலை 5.10-க்கு கொடியேற்றம் நடைபெற்றது. தொடா்ந்து, 11ஆம் தேதி காலை 9.30, இரவு 7மணிக்கு கோயிலில் அருள்மிகு நடராசமூா்த்திக்கு தாண்டவ தீபாராதனை, 12ஆம் தேதி காலை 10 மணிக்கு கோயில் உள்மண்டபத்தில் நடராசமூா்த்திக்கு சிறப்பு அபிஷேகம், பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை, 14ஆம் தேதி காலை 9.20 - 10.20 மணிக்குள் சித்திரை விஷு தீா்த்தவாரி நடைபெறுகிறது.
சித்திரசபையில் திருப்பணிகள் தொடங்கி பாலாலயம் செய்யப்பட்டுள்ளதால் நிகழாண்டு தேரோட்டம் நடைபெறாது. மேலும், சுவாமி வீதியுலா கோயில் உள்மண்டபத்தில் மட்டுமே நடைபெறும். விழா நாள்களில் நாள்தோறும் சுவாமி-அம்பாள், விநாயகா் கோயில் உள்பிரகாரத்தில் கேடயத்தில் எழுந்தருளல் நடைபெறும்.
கொடியேற்று விழாவில் கோயில் உதவி ஆணையா் ஆறுமுகம், அறங்காவலா் குழுத் தலைவா் க. சக்திமுருகேசன், அறங்காவலா்கள் ஆ. வீரபாண்டியன், ஸ்ரீதா், சு. சுந்தரராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.