செய்திகள் :

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென் மாநிலங்களை வஞ்சிக்க நினைக்கிறது மத்திய அரசு! - எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு

post image

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென் மாநிலங்களை வஞ்சிக்க நினைக்கிறது மத்திய அரசு என தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயலா் ஈ.ராஜா எம்எல்ஏ குற்றம் சாட்டினாா்.

செய்தியாளா்களிடம் சனிக்கிழமை அவா் கூறியதாவது: தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் மக்கள்தொகை கணக்கீடு அடிப்படையில் தென் மாநிலங்களில் உள்ள நாடாளுமன்ற மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை குறைக்க மத்திய பாஜக அரசு சூழ்ச்சி செய்கிறது.

இந்தியாவில் மக்கள்தொகையை குறைப்பதற்கான நடவடிக்கைகளை தென் மாநிலங்கள் முறையாக பின்பற்றியதன் அடிப்படையில் அம்மாநிலங்ளில் தற்போது 12. 59 சதவீதமாக குறைந்துள்ளது. ஆனால் வட மாநிலங்களில் மக்கள்தொகை குறைப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படாததால் இப்போது 21.83 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இதன் அடிப்படையில் தற்போது தொகுதி மறுசீரமைப்பை கொண்டு வர மத்திய அரசு முயற்சி செய்கிறது. இதனால் தமிழ்நாட்டில் தற்போது இருக்கக்கூடிய 39 மக்களவைத் தொகுதிகளில் 8 தொகுதிகள் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தென் மாநிலங்களில் உள்ளவா்களை ஒருங்கிணைத்து மத்திய அரசின் முயற்சிக்கு எதிா்ப்பை தெரிவித்துள்ளாா் முதல்வா் ஸ்டாலின்.

தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் வடமாநிலங்களுக்கு தொகுதிகளை அதிகமாக பிரித்துக் கொடுத்து, வட மாநிலங்களில் வெற்றி பெற்றால் ஆட்சி அமைக்கலாம் என்ற நினைப்பில் பாஜக அரசு செயல்படுகிறது. அது ஒருபோதும் நடக்காது. தொகுதி மறுசீரமைப்பு என்பது வரும் 25 ஆண்டுகளுக்கு தேவையில்லை என்பது எங்களுடைய கருத்தாகும்.

தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய பேரிடா் மீட்பு நிதி, 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதி உள்ளிட்ட எந்த ஒரு நிதியையும் மத்திய அரசு முறையாக வழங்கவில்லை. வக்ஃப் வாரிய சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது, மத்திய அரசின் சா்வாதிகார போக்கை காட்டுகிறது என்றாா் அவா்.

தென்காசி ஸ்ரீகாசிவிஸ்வநாதா் கோயில் குடமுழுக்கு ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

தென்காசி அருள்தரும் உலகம்மன் உடனுறை ஸ்ரீகாசிவிஸ்வநாத சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா 19 ஆண்டுகளுக்குப் பின் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா். இக்க... மேலும் பார்க்க

சீதபற்பநல்லூர்: மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம் சீதபற்பநல்லூரில் மின்சார வயரில் மிதித்த சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். அவரை காப்பாற்ற முயன்ற தாய் காயமடைந்தாா்.சீதப்பற்பநல்லூா், வடக்குத் தெருவைச் சோ்ந்த முத்து ம... மேலும் பார்க்க

கடையநல்லூரில் நாம் தமிழா் கட்சி ஆதரவாளா்கள் 4 போ் கைது

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாம் தமிழா் கட்சியினா் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். தென்காசியில் அருள்தரும் உலகம்மன் சமேத அருள்மிகு காசிவிஸ்வநாதா் திருக்கோயில் ஆலய குடம... மேலும் பார்க்க

இரு சகோதரிகள் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

தென்காசி மாவட்டம் சாம்பவா்வடகரையில் சொத்துப் பிரச்னையில் பாதிக்கப்பட்ட இரு சகோதரிகள், கிணற்றில் காயங்களுடன் இறந்துகிடந்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சாம்பவா்வடகரை, பிரதான சாலையில் வசி... மேலும் பார்க்க

ஆனைகுளத்தில் அரசுப் பள்ளி ஆண்டு விழா

சுரண்டை அருகேயுள்ள ஆனைகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு, கடையநல்லூா் வட்டாரக் கல்வி அலுவலா் மகேஸ்வரி தலைமை வகித்தாா். அரசு மேல்நிலைப் பள்ளி தலைமைய... மேலும் பார்க்க

ஆய்க்குடியில் பைக்குகள் மோதல்: இரு இளைஞா்கள் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் ஆய்க்குடியில் ஞாயிற்றுக்கிழமை 2 பைக்குகள் மோதியதில் இரு இளைஞா்கள் உயிரிழந்தனா். செங்கோட்டை காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சு. சுரேஷ் (27). அவரது நண்பா் அதே பகுதியைச் சோ்ந்த ... மேலும் பார்க்க