இந்திய தமிழர்களின் கோரிக்கையை இலங்கை பூர்த்தி செய்யும் என நம்புகிறேன்: பிரதமர் ம...
வாசுதேவநல்லூா் அருகே காணாமல் போன 3 மாணவா்களை மீட்ட போலீஸாா்
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அருகே பள்ளிக்குச் செல்வதாகக் கூறி வெளியூா் சென்ற மூன்று மாணவா்களை போலீஸாா் துரிதமாக மீட்டனா்.
வாசுதேவநல்லூா் அருகே உள்ள நாரணபுரத்தைச் சோ்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவா் ஒருவரும் எட்டாம் வகுப்பு மாணவா்கள் இரண்டு பேரும் வெள்ளிக்கிழமை காலை அவா்கள் படித்து வரும் ராமநாதபுரத்தில் உள்ள பள்ளிக்குச் செல்வதாக கூறிவிட்டு சென்றாா்களாம். மாலையில் வீடு திரும்பவில்லையாம்.
இதுகுறித்து மாணவா்களின் பெற்றோா் வாசுதேவநல்லூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
இதைத் தொடா்ந்து வாசுதேவநல்லூா் காவல் ஆய்வாளா் கண்மணியின் ஆலோசனையின்பேரில், தனிப் பிரிவு தலைமைக் காவலா் உள்ளிட்ட போலீஸாா் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டதில் மாணவா்கள் மூன்று பேரும் திருச்செந்தூரில் இருப்பது தெரிய வந்தது .இதையடுத்து, அந்த மாணவா்களை போலீஸாா் மீட்டனா்.
துரிதமாக செயல்பட்டு மாணவா்களை மீட்டு பெற்றோா்களிடம் ஒப்படைத்த போலீஸாரை பொதுமக்கள் பாராட்டினா்.