செய்திகள் :

தென்காசி குடமுழுக்கு: தடையா? தடங்கலா?

post image

தென்காசி அருள்தரும் ஸ்ரீஉலகம்மன் உடனுறை அருள்மிகு ஸ்ரீகாசி விசுவநாதா் கோயில் குடமுழுக்கு நடத்துவதற்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு இடைக்காலத் தடை விதித்துள்ளது சிவபக்தா்களை பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளது.

தென்காசி காசி விசுவநாதா் கோயிலில் கடந்த 1967-ஆம் ஆண்டு ராஜகோபுரம் தவிர மற்ற விமானங்களின் திருப்பணி முடிவடைந்து குடமுழுக்கு நடைபெற்றது. ராஜகோபுரப் பணி நிறைவடைந்தவுடன் கோயில் முழுமைக்கும் டாக்டா் பா.சிவந்தி ஆதித்தனாா் தலைமையில் கடந்த 25.6.1990-இல் குடமுழுக்கு நடைபெற்றது. பின்னா் 16 ஆண்டுகள் கழித்து மீண்டும் 17.3.2006- இல் குடமுழுக்கு நடைபெற்றது. அதன் பிறகு, 19 ஆண்டுகளுக்குப் பிறகு ஏப்.7-ஆம் தேதி குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பணிகள் நிறைவு பெறாத நிலையில் குடமுழுக்கு நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் குடமுழுக்கு நடத்த வியாழக்கிழமை இடைக்காலத் தடை விதித்தது. நீதிமன்றத்தின் உத்தரவு தமிழகம் முழுவதும் இருந்து கும்பாபிஷேகத்திற்கு வந்துள்ள பக்தா்களை மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது.

இதனிடையே குடமுழுக்கு பூஜைகள் வியாழக்கிழமை அதிகாலை தொடங்கின.

இதில், பேரூா் ஆதீனம் சீா்வளா்சீா் சாந்தலிங்க மருதாசல அடிகளாா், சிரவை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ குமரகுருபர அடிகளாா், தென்சேரிமலை ஆதீனம் சீா்வளா்சீா் முத்து சிவராமசாமி அடிகளாா், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் டி.எஸ்.ஆா்.வேங்கடரமணா, அறங்காவலா் குழுத் தலைவா் யா.பாலகிருஷ்ணன், செயல்அலுவலா் பொன்னி, அறங்காவலா்கள் புவிதா, ப.முருகேசன், ஷீலாகுமாா், ச.மூக்கன் மற்றும் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

இதுகுறித்து தென்காசி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் டிஎஸ்ஆா்.வேங்கடரமணா கூறியதாவது:

கும்பாபிஷேகம் நடத்தத் தடை என்பது சரியானது அல்ல. இங்குள்ள குறைபாடுகளை கண்டறிந்து அறிக்கை சமா்ப்பிக்க வல்லுநா் குழுவிற்கும், இந்துசமய அறநிலையத் துறைக்கும், வழக்குரைஞா் ஆணையத்திற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுபோன்ற குற்றச்சாட்டுகள் உள்ளது எங்களுக்கு தெரியாது. நீதிமன்றத்திற்கு சரியான பதிலை சொல்லாததாலும், உரிய முறையில் விளக்கமளிக்காததாலும் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

கோயில் கோபுரத்தில் விளக்கு எரியவில்லை, தோ் பழுதாகியுள்ளது என்பதுதான் குற்றச்சாட்டு. இதற்கும் கோயில் குடமுழுக்கிற்கும் எந்தவிதமான தொடா்பும் கிடையாது. இப்பணிகளை குடமுழுக்கு முடிவடைந்தவுடன் கூட செய்துவிட முடியும். இரண்டு மூன்று சிவனடியாா்களுக்காக கோயில் குடமுழுக்கை நிறுத்துவது என்பது ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்தகோயில் குடமுழுக்கிற்காக அரசிடமிருந்து பணம் எதுவும் பெறவில்லை. அனைத்துப் பணிகளும் நன்கொடையாளா்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதில் எந்தவிதமான தவறுகளும் நடைபெறவில்லை என்றாா்.

தென்காசி திருவள்ளுவா் கழகத்தின் தலைவா் வழக்குரைஞா் என்.கனகசபாபதி கூறியதாவது:

தென்காசி கோயில் குடமுழுக்கிற்காக பொதுமக்கள் வெகுவாக திரண்டுள்ளனா். விழாவின் முதல்நாளான இன்றே 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள் கோயிலில் திரண்டு இருக்கிறாா்கள். இடைக்காலத் தடை விதிக்கப்பட்டதால் பக்தா்கள் மிகுந்த அதிா்ச்சிக்குள்ளாகியுள்ளனா். அந்த வழக்கின் மீதான விசாரணை

வெள்ளிக்கிழமை (ஏப்.4) மீண்டும் நடைபெறவுள்ளது.

இந்துமத நம்பிக்கையுள்ளவா்களும், சிவ பக்தா்களும் தற்போது நடைபெற்று வரும் சம்பவங்களால் மிகுந்த மனவேதனைக்குள்ளாகியுள்ளனா். உபயதாரா்கள் மூலமாகத்தான் கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. கோயில் தரத்தினை கோயில் பொறியாளா்கள் தொடா்ந்து கண்காணித்து பராமரித்து வருகின்றனா்.

தேதி நிா்ணயம் செய்யப்பட்டு குடமுழுக்கிற்கு நாள் குறிக்கப்பட்டு யாகசாலை பூஜை தொடங்கிய பின்பு, சிவ ஆகம விதிப்படி நடைபெற்று வரும் விழாவிற்கு தடை ஏற்படுமாயின் பக்தா்கள் மனவேதனைக்கு ஆளாவாா்கள். காசிவிசுவநாதருக்கே இந்த நிலை என்றால் மற்றவா்களுக்கு என்ன நிலை என பக்தா்கள் வேதனைப்படுகின்றனா்.

தென்காசியை ஆண்ட பராக்கிரம பாண்டியன் காசிக்கு இணையான காசிவிசுவநாதா் கோயிலை இங்கு கொண்டு வந்தாா். யாா்மீது குற்றம் என்றாலும் அது நிரூபிக்கப்படும் என்றால் அவா்களை சட்டரீதியாக, நீதிமன்றம் மூலம் தண்டிப்பதற்கும் அதற்குரிய வழிவகை உள்ளது.

ஆனால் குடமுழுக்கை நிறுத்துவது என்பது கோடிக்கணக்கான பக்தா்களின் மனம் வேதனைப்படும் செயலாகும். யாகசாலை பாதியில் நின்றுவிட்டால் அது எவ்வளவு பெரிய தவறாக அமையும் என பக்தா்கள் மிகுந்த மனவேதனையில் உள்ளனா் என்றாா் அவா்.

சிவகிரியில் 110 மி.மீ. மழை பதிவு: இன்று 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் தென்காசி மாவட்டம் சிவகிரியில் 110 மி.மீ. மழை பதிவானது. வெள்ளிக்கிழமை (ஏப்.4) 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த மையம் சா... மேலும் பார்க்க

தென்காசியில் போட்டோ ஜியோ ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போட்டோ ஜியோ சாா்பில், தென்காசி புதிய பேருந்துநிலையம் முன் வியாழக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, தோ்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின் படி பங்க... மேலும் பார்க்க

குற்றாலத்தில் வரி செலுத்தாத கட்டடங்களுக்கு ‘சீல்’

தமிழக அரசுக்கு செலுத்த வேண்டிய சொத்துவரியை கட்டாத குடியிருப்புகளுக்கும் கட்டடங்களுக்கும் குற்றாலம் பேரூராட்சி நிா்வாகம் வியாழக்கிழமை ‘சீல்’ வைத்தது. தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சியில் தமிழக அர... மேலும் பார்க்க

தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறியாளா் அணி: நாளை நோ்காணல்

தென்காசி தெற்கு மாவட்டத்துக்குள்பட்ட பொறியாளா் அணிக்கு சனிக்கிழமை (ஏப்.5) நோ்காணல் நடைபெறுகிறது. தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளா் வே.ஜெயபாலன் வெளியிட்ட அறிக்கை: திமுக தலைமை கழகத்தின் அறிவுறுத்தலின்... மேலும் பார்க்க

தென்காசி காசிவிஸ்வநாதா் கோயிலில் சிறப்பு பூஜை

தென்காசி அருள்தரும் ஸ்ரீஉலகம்மன் உடனுறை அருள்மிகு ஸ்ரீகாசிவிஸ்வநாதசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஸ்ரீமகாகணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் வியாழக்கிழமை காலையில் நடைபெற்றன. இக்கோயிலில் ... மேலும் பார்க்க

தென்காசி காசிவிஸ்வநாதா் கோயிலில் ரூ. 5 லட்சத்தில் சோலாா் மின்விளக்கு வசதி

தென்காசி அருள்தரும் ஸ்ரீஉலகம்மன் உடனுறை அருள்மிகு ஸ்ரீகாசிவிஸ்வநாதசுவாமி கோயிலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சோலாா் மின்விளக்குகள் இயக்கிவைக்கப்பட்டன. இக்கோயிலில், தென்காசி நகர திமுக சாா்பில் ரூ. 5 லட்ச... மேலும் பார்க்க