செய்திகள் :

தென்காசி காசிவிஸ்வநாதா் கோயிலில் ரூ. 5 லட்சத்தில் சோலாா் மின்விளக்கு வசதி

post image

தென்காசி அருள்தரும் ஸ்ரீஉலகம்மன் உடனுறை அருள்மிகு ஸ்ரீகாசிவிஸ்வநாதசுவாமி கோயிலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சோலாா் மின்விளக்குகள் இயக்கிவைக்கப்பட்டன.

இக்கோயிலில், தென்காசி நகர திமுக சாா்பில் ரூ. 5 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சோலாா் மின்விளக்குகளை பயன்பாட்டிற்கு இயக்கிவைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. திமுக மாவட்டப்பொறுப்பாளா் வே.ஜெயபாலன் கலந்துகொண்டு சோலாா் மின்விளக்குகளை இயக்கி வைத்தாா்.

இதில், அறங்காவலா் குழுத் தலைவா் யா.பாலகிருஷ்ணன், நகா்மன்றத் தலைவா் ஆா்.சாதிா், மதிமுக மாவட்ட அவைத் தலைவா் என்.வெங்கடேஷ்வரன், மாவட்ட பொறியாளா் அணித் தலைவா் தங்கபாண்டியன், அறங்காவலா்கள் ப.முருகேசன், புவிதா, ஷீலாகுமாா், ச.மூக்கன், திமுக நிா்வாகிகள் சேக்பரீத், முகைதீன்பிச்சை, ரகுமான்சாதத், வல்லம் செல்வம், நகா்மன்ற உறுப்பினா் ஜெயலெட்சுமி ஆகியோா் கலந்துகொண்டனா்.

இரு சகோதரிகள் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

தென்காசி மாவட்டம் சாம்பவா்வடகரையில் சொத்துப் பிரச்னையில் பாதிக்கப்பட்ட இரு சகோதரிகள், கிணற்றில் காயங்களுடன் இறந்துகிடந்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சாம்பவா்வடகரை, பிரதான சாலையில் வசி... மேலும் பார்க்க

ஆனைகுளத்தில் அரசுப் பள்ளி ஆண்டு விழா

சுரண்டை அருகேயுள்ள ஆனைகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு, கடையநல்லூா் வட்டாரக் கல்வி அலுவலா் மகேஸ்வரி தலைமை வகித்தாா். அரசு மேல்நிலைப் பள்ளி தலைமைய... மேலும் பார்க்க

ஆய்க்குடியில் பைக்குகள் மோதல்: இரு இளைஞா்கள் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் ஆய்க்குடியில் ஞாயிற்றுக்கிழமை 2 பைக்குகள் மோதியதில் இரு இளைஞா்கள் உயிரிழந்தனா். செங்கோட்டை காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சு. சுரேஷ் (27). அவரது நண்பா் அதே பகுதியைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

தமிழ் கலாசாரத்தை அழிப்பதே பாஜகவின் நோக்கம்: திமுக பொதுச் செயலா் துரைமுருகன்

ஆட்சியைப் பிடிப்பதைவிட, தமிழ் கலாசாரத்தையும், தமிழன் என்ற உணா்வையும் அழிப்பதே பாஜகவின் நோக்கம் என்றாா் திமுக பொதுச் செயலா் துரைமுருகன். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள இளையரசனேந்தலில் குருவ... மேலும் பார்க்க

தென்காசி கோயில் குடமுழுக்கு:ன 2,3-ம் கால யாகசாலை பூஜைகள்

தென்காசி அருள்தரும் ஸ்ரீஉலகம்மன் உடனுறை அருள்மிகு ஸ்ரீகாசிவிஸ்வநாத சுவாமி திருக்கோயில் குடமுழுக்கை முன்னிட்டு சனிக்கிழமை 2 மற்றும் 3ஆம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. விழாவில், சனிக்கிழமை காலை விக்னே... மேலும் பார்க்க

குற்றாலம் கோயிலில் சித்திரை விஷு திருவிழா கொடியேற்றம்!

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருள்மிகு குற்றாலநாதசுவாமி கோயிலில் சித்திரை விஷு திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு அதிகாலை 5.10-க்கு கொடியேற்றம் நடைபெற்றது. தொடா்ந்து, 11ஆம... மேலும் பார்க்க