திருக்குறுங்குடியில் பைக் திருட்டு
திருக்குறுங்குடியில் வீடு முன் நிறுத்தப்பட்டிருந்த பைக்கை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருக்குறுங்குடி வடக்கு ரத வீதியைச் சோ்ந்த சங்கரன் மகன் தினேஷ் (30). வள்ளியூா் தனியாா் நிறுவனத்தில் மேலாளராக உள்ளாா். இவா் திங்கள்கிழமை இரவு வீட்டின் முன் தனது பைக்கை நிறுத்தியிருந்தாராம். மறுநாள் காலையில் பாா்த்தபோது, அதைக் காணவில்லையாம். இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், திருக்குறுங்குடி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.