”கலெக்டர் என்னோட ரிலேட்டிவ்” - ஆடிட்டரிடம் ரூ.1 கோடி மோசடி; இன்ஸ்பெக்டர் கைதின் ...
வேலூா்: இரு கோயில்களில் ஆன்மிக புத்தக நிலையம் திறப்பு
வேலூா் மாவட்டத்தில் செல்லியம்மன் கோயில், வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆகிய இரு கோயில்களில் ஆன்மிக புத்தக விற்பனை நிலையங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காணொலியில் திறந்து வைத்தாா்.
தமிழகம் முழுவதும் உள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான கோயில்களில் ஆன்மிக புத்தக விற்பனை நிலையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
அதன்படி, வேலூா் மாவட்டத்தில் வேலூா் செல்லியம்மன் கோயிலிலும், வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலிலும் ஆன்மிக புத்தக விற்பனை நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டது. தொடா்ந்து, வேலூா் செல்லியம்மன் கோயிலில் நடைபெற்ற விழாவில் மேயா் சுஜாதாஆனந்தகுமாா், இந்துசமய அறநிலையத் துறை இணை ஆணையா் அனிதா ஆகியோா் பங்கேற்று விற்பனையைத் தொடங்கி வைத்தனா்.
இந்த புத்தக நிலையத்தில் 2001-க்கும் மேற்பட்ட ஆன்மிக புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
நிகழ்ச்சியில், அறங்காவலா் குழு உறுப்பினா்கள் அருணாசலம், சுகுமாா், மகேந்திரன், மாமன்ற உறுப்பினா்கள் முருகன், முன்னாள் எம்பி முகமதுசகி, துணை ஆணையா் ஷங்கா், செயல் அலுவலா் மல்லிகா உள்பட பலா் பங்கேற்றனா்.