செய்திகள் :

"சட்டமன்றத் தேர்தலுக்கு அருமையான அறிவிப்புகளை எடப்பாடி பழனிசாமி வெளியிடுவார்" - ராஜேந்திர பாலாஜி

post image

விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு பேசினார்.

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "தி.மு.க. ஆட்சியில் விலைவாசி விஷமாக ஏறிவிட்டது. ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டு பத்தாயிரம் ரூபாய்க்குச் செலவை இழுத்து விட்டுள்ளனர்.

பேச்சு

வீட்டு வரி, சொத்து வரி, விதை நெல் விலை, நெல்லுக்கு மருந்து, உரம் விலை, கட்டுமானத்தில் செங்கல் விலை, சிமெண்ட் விலை உயர்ந்துவிட்டன.

அ.தி.மு.க. சார்பில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு அருமையான விஷயங்களைத் தேர்தல் அறிக்கையாகத் தயார் செய்து எடப்பாடி பழனிசாமி வெளியிட உள்ளார்.

மக்கள் எதிர்பார்க்கிற விலைவாசி கட்டுப்படுத்தப்படும். உழைப்பவருக்கு மரியாதை, ஊதியம் கிடைக்கும் வகையில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்.

ராஜேந்திர பாலாஜி பேச்சு

அனைத்து கடன்களும் ரத்து செய்யப்படும் என்று சொல்லியே தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. ஆட்சிக்கு வந்தபின்பு தி.மு.க. ஆட்களைப் பார்த்து கடன்களை ரத்து செய்துள்ளது.

இதனால் பலபேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலை மாறவேண்டும்" எனப் பேசினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Waqf: வக்ஃப் திருத்த மசோதா என்றால் என்ன? அதன் நோக்கம்? எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது ஏன்?| Explainer

நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வக்ஃப் திருத்த மசோதா 2025-ஐ பாஜக கூட்டணி அரசு நிறைவேற்றியிருக்கிறது. இந்த விவகாரத்தில், `சிறுபான்மையினரின் மத சுதந்திரத்தில் பாஜக ... மேலும் பார்க்க

ஒன் பை டூ!

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், செய்தித் தொடர்புச் செயலாளர், தி.மு.க“எங்கள் முதல்வர் மிக நாகரிகமாகச் சொல்லியிருக்கிறார். `வேற்றுமையில் ஒற்றுமை’ என்றிருந்த இந்திய தேசத்தை, தற்போது உலக நாடுகள் சகிப்புத்தன்மைய... மேலும் பார்க்க

TVK : 'கச்சத்தீவு விவகாரத்தில் கண்துடைப்பு நாடகம் ஆடும் திமுக!' - கடுமையாக சாடும் விஜய்!

கச்சத்தீவை மீட்பது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் ஒரு தனித்தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தார். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஓர் அறிக்கைய... மேலும் பார்க்க