செய்திகள் :

ஒன் பை டூ!

post image

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், செய்தித் தொடர்புச் செயலாளர், தி.மு.க

“எங்கள் முதல்வர் மிக நாகரிகமாகச் சொல்லியிருக்கிறார். `வேற்றுமையில் ஒற்றுமை’ என்றிருந்த இந்திய தேசத்தை, தற்போது உலக நாடுகள் சகிப்புத்தன்மையற்ற, மதவெறி பிடித்த நாடகப் பார்க்கிறார்கள். அதற்கு உத்தரப்பிரதேசத்தில் வெறுப்பை மட்டுமே ஆதாரமாகக்கொண்டு யோகி நடத்தும் ஆட்சியும் ஒரு முக்கியக் காரணம். மேலும், அந்த மாநிலத்தில் இஸ்லாமியச் சகோதரர்களை இரண்டாம் குடிகளாக்க முயல்வது, புல்டோசர்கொண்டு அவர்களின் கட்டடங்களைத் தகர்ப்பது என யோகி ஆட்சியின் கோரங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். உச்ச நீதிமன்றமே ‘இந்த நாசகார நடவடிக்கைகளை நிறுத்துங்கள்’ என்று கண்டிக்கும் அளவுக்கு, ஒரு காட்டு தர்பார் ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறார் யோகி ஆதித்யநாத். ஆனால், மக்களையும் கடந்து ‘காக்கை குருவி எங்கள் சாதி...’ என அத்தனை உயிர்களையும் நேசிக்கும் முதல்வராகத் தமிழக முதல்வர் இருக்கிறார். சொந்த மாநில மக்களையே வெறுக்கும் யோகிக்கு இதெல்லாம் ஒருபோதும் புரியாது. நாங்கள் எப்போதுமே எந்த மொழிக்கும் எதிரானவர்கள் கிடையாது. அதேசமயம், எந்த மொழித் திணிப்பையும் நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். தமிழ் மொழியைத் தாண்டி, மற்ற 22 மொழிகளுக்கும் சேர்த்தே தமிழக முதல்வர் குரல் கொடுக்கிறார். இதை ஏழு மாநில முதல்வர்கள் வழிமொழிந்திருப்பது சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. வெறுப்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு ஆட்சி நடத்தும் யோகி, திராவிட மாடல் ஆட்சி குறித்துப் பேச எந்த அருகதையும் அற்றவர்!”

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், வினோஜ் பி செல்வம்

வினோஜ் பி செல்வம், மாநிலச் செயலாளர், பா.ஜ.க

“தமிழக முதல்வரின் பேச்சு அர்த்தமற்றது. இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இந்தியை வைத்தும், இருமொழிக் கொள்கையை வைத்தும் அரசியல் செய்யப்போகிறது தி.மு.க... ‘தங்களின் குறுகிய அரசியல் சுயநலத்துக்காக, மொழியை வைத்து அரசியல் செய்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்’ என்பதைப் பொதுவெளியில் போட்டு உடைத்திருக்கிறார் யோகி ஆதித்யநாத். ஒரு மாநிலத்தின் தாய்மொழி அவசியம்தான். அதை யாரும் விட்டுக்கொடுக்கச் சொல்லவில்லை. ஆனால் கூடுதல் மொழிப்பயிற்சி, மாணவர்களின் எதிர்காலத்தை இன்னும் சிறப்படையச் செய்யும். உத்தரப்பிரதேசத்தை எடுத்துக்கொண்டால், அங்கிருக்கும் பள்ளிகளில் தமிழ் உட்பட ஆறு மொழிகள் சொல்லிக்கொடுக்கப்படுகின்றன. காசி தமிழ்ச் சங்கம் நடைபெற்றதும் அதே உ.பி-யில்தான். இத்தனை மொழிகளைச் சொல்லிக்கொடுப்பதால், அந்த மாநிலம் பின்னோக்கிப் போய்விட்டதா என்ன... முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வளர்ச்சி அடைந்திருக்கிறது. உதாரணமாக, இங்கே தமிழகத்தில் ரூ.6 லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்த நேரத்தில், உ.பி-யில் 33 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டது. இதிலிருந்தே உண்மை நிலையை நாம் நன்கு உணரலாம். ‘மொழியை வைத்து அரசியல் செய்து மாணவர்களின் எதிர்காலத்தையும், இளைஞர்களின் வேலைவாய்ப்பையும் பறிக்கிறது தி.மு.க’ என்று யோகி கூறியதில் எந்தத் தவறும் இல்லை. ‘இப்படி உண்மையைச் சொல்லிவிட்டார்களே...’ என்ற ஆதங்கத்தில், வாய்க்கு வந்ததை உளறிக்கொட்டியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்!”

Waqf: வக்ஃப் திருத்த மசோதா என்றால் என்ன? அதன் நோக்கம்? எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது ஏன்?| Explainer

நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வக்ஃப் திருத்த மசோதா 2025-ஐ பாஜக கூட்டணி அரசு நிறைவேற்றியிருக்கிறது. இந்த விவகாரத்தில், `சிறுபான்மையினரின் மத சுதந்திரத்தில் பாஜக ... மேலும் பார்க்க

"சட்டமன்றத் தேர்தலுக்கு அருமையான அறிவிப்புகளை எடப்பாடி பழனிசாமி வெளியிடுவார்" - ராஜேந்திர பாலாஜி

விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு பேசினார்.நிகழ்ச்சியில் அவர்... மேலும் பார்க்க

TVK : 'கச்சத்தீவு விவகாரத்தில் கண்துடைப்பு நாடகம் ஆடும் திமுக!' - கடுமையாக சாடும் விஜய்!

கச்சத்தீவை மீட்பது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் ஒரு தனித்தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தார். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஓர் அறிக்கைய... மேலும் பார்க்க