தனியார் நிறுவனத்தில் ரூ.1 கோடி தரவுகள் திருட்டு: அமெரிக்காவிலிருந்து வந்த மருத்த...
பஞ்சாப்: மார்ச் மாதத்தில் மட்டும் போதைப்பொருள் வழக்குகளில் 4,706 பேர் கைது
பஞ்சாப் மாநிலத்தில் கடந்தாண்டைவிட நிகழாண்டில் போதைப்பொருள் வழக்குகளில் கைது எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் நிகழாண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம்வரையில் மட்டும் 5,835 பேர் மீது போதைப்பொருள் தொடர்பான 4,192 வழக்குகளில் கைது செய்யப்பட்டதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. யுத் நஷேயன் விருத் நடவடிக்கைகளின்கீழ், சராசரியாக ஒரு நாளைக்கு 64 நபர்களை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்வதாகக் கூறுகின்றனர்.
மார்ச் மாதத்தில் மட்டும் 4,706 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், ரூ. 73.9 லட்சமும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின்போது பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த ஒருநாள் சராசரி கைது எண்ணிக்கை, கடந்தாண்டில் 33 என்ற அளவிலேயே இருந்தது. அதற்கு முந்தைய ஆண்டான 2023-ல் 41 என்ற நிலையில் இருந்தது.
இந்த நிலையில், தில்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வியடைந்ததால், பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசு போதைப்பொருள் நடவடிக்கையில் தீவிரமாக களமிறங்கியதாக கூட்டணிக் கட்சிகளான பாஜகவும் ஷிரோமணி அகாலி தளமும் கூறுகின்றன.
கைது எண்ணிக்கை அதிகரித்தாலும், போதைக்கு அடிமையாகி மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படாமல் இருப்பது சந்தேகமளிப்பதாக கேள்வி எழுப்புகின்றனர்.
இதையும் படிக்க:போலி மருத்துவரின் இதய அறுவைச் சிகிச்சையால் 7 பேர் பலி!