செய்திகள் :

நிறமி வீடியோ வைரல்; தர்பூசணி வியாபாரம் பாதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு; உணவுத்துறை அதிகாரி இடமாற்றம்

post image

“தர்பூசணியை வெட்டி, அதைக் காட்டன் துண்டு அல்லது டிஷ்யூ பேப்பரை வைத்து துடைக்க வேண்டும். அப்போது அந்த காட்டான் அல்லது டிஷ்யூ பேப்பர் சிவப்பு நிறமாக மாறினால், அது கலப்படம் செய்யப்பட்ட தர்பூசணி.

இயற்கையான தர்பூசணியில் நிறம் ஒட்டாது. தர்பூசணியின் உள்பகுதியில் மஞ்சள் நிறப்புள்ளிகளும், வெள்ளை நிறமும் இருந்தால் அது ஊசி போடப்பட்ட தர்பூசணி" என்று சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர் சதீஷ்குமார் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

வியாபாரிகளின் போராட்டம்

இந்த வீடியோ மிகவும் வைரலாக தர்பூசணி விற்பனை சரிந்ததாகக் கூறப்படுகிறாது. இந்த வியாபாரத்தை நம்பியிருந்த வியாபாரிகள் பாதிப்படைந்தனர்.

நான் அப்படி சொல்லவே இல்லை; அது வதந்தி|தர்பூசணி
நான் அப்படி சொல்லவே இல்லை; அது வதந்தி|தர்பூசணி

இதனால், வியாபாரிகள் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு எதிராகப் போர்கொடியைத் தூக்கினர். ஆங்காங்கே போராட்டங்களிலும் ஈடுப்பட்டனர்.

அதிகாரியின் அந்தர்பல்டி

போராட்டங்கள் வலுவடைய, "அனைத்து விவசாயிகளும் தர்பூசணியில் ஊசிப்போடுகிறார்கள் என்று நான் சொல்லவில்லை. அது வதந்தி.

கெட்டுப்போன தர்பூசணி பழங்கள், எலி கடித்த பழங்கள் ஆகியவற்றைத்தான் நாங்கள் அழித்தோம். நாங்கள் பரிசோதித்த எந்தப் பழத்திலும் ரசாயனம் நிறமி கலக்கப்படவில்லை" என்று அந்தர்பல்டி அடித்தார் அந்த அதிகாரி.

இருந்தும் அந்தப் போராட்டங்கள் ஓயாமல் அந்த அதிகாரியைப் பணிமாற்றம் செய்ய வேண்டும் என்று வியாபார்களிடம் இருந்து கோரிக்கை எழுந்தது.

எங்கே மாற்றம்?

இதையடுத்து, சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்கத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இப்போது யார்?

இனி சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையைக் கூடுதலாகத் திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி போஸ் கவனிப்பார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: எம்புரான் படக் காட்சிகள் நீக்கம்; போராடிய விவசாயிகள் மகிழ்ச்சி

நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்ற லூசிஃபர் படத்தின் 2 ஆம் பாகமாக எம்புரான் திரைப்படம் வெளியாகியுள்ளது.இந்தத் திரைப்படத்தில் 2002 குஜராத் கலவர... மேலும் பார்க்க

``சதீஷ்குமார் வீடியோக்காரர்களை அழைத்துக்கொண்டு சோதனை செய்வதுபோல் நாடகம்" - கொதிக்கும் வியாபாரிகள்

தர்பூசணியில் கலப்படம் செய்யப்படுவதாக வீடியோ வெளியிட்டு, பிறகு கலப்படம் இல்லை என்று பின்வாங்கிய சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் சதீஷ்குமாரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று வியாபாரிகள், விவ... மேலும் பார்க்க

தர்பூசணியின் சிவப்பு நிறத்துக்குக் காரணம் ரசாயன ஊசியல்ல; வதந்திகளை நம்பவே நம்பாதீர்கள் - வேளாண்துறை

“கடையில் வாங்கிய தர்பூசணியை சிறு துண்டாக வெட்டி, அதைக் காட்டன் துண்டு அல்லது டிஷ்யூ பேப்பரை கொண்டு துடைக்க வேண்டும். அப்படி துடைக்கும்போது துண்டு அல்லது டிஷ்யூ பேப்பர் சிவப்பு நிறமாக மாறினால், அது கல... மேலும் பார்க்க

திண்டுக்கல்: காசம்பட்டி பல்லுயிர் தளமாக அறிவிப்பு; விவசாயிகளுக்குக் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

மதுரை மாவட்டத்தில் உள்ள அரிட்டாப்பட்டியில் சுமார் 200 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட பகுதியைத் தமிழகத்தின் முதல் பாதுகாக்கப்பட்ட பாரம்பரிய பல்லுயிர் தளமாக 2022-ல் தமிழக அரசு அறிவித்தது.இதையடுத்து திண்டுக்கல்... மேலும் பார்க்க

ஊட்டி: தரிசு நிலம் டு ஆர்கானிக் கூட்டு வேளாண்மைத் தோட்டம்; அசத்தும் ஆனைப்பள்ளம் பழங்குடிகள்!

ஆங்கிலேயர்களால் நீலகிரியில் அறிமுகப்படுத்தப்பட்ட இங்கிலீஷ் வெஜிடபிள்ஸ் எனப்படும் மேலை நாட்டுக் காய்கறி சாகுபடியில் அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆறுகளின் ஊற்றுக்கண்ணாக இருந்து வ... மேலும் பார்க்க

பசுமை சந்தை

விற்க விரும்புகிறேன்ஆர்.செந்தமிழ்ச்செல்வன், வடுகக்குடி, தஞ்சாவூர். 96885 25605 நல்ல நிலையில் உள்ள பழைய டிராக்டர். மதுகண்ணன்,சிவகங்கை. 96550 16306 கீழாநெல்லி, துத்தி, தும்பை, அம்மான் பச்சரிசி, ஆவாரம்பூ... மேலும் பார்க்க