Modi TN Visit: திறந்துவைத்து, பச்சைக்கொடி அசைத்த பிரதமர் மோடி; பாம்பன் பாலத்தைக்...
ராஜஸ்தான் கலக்கல்! 50 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் படுதோல்வி!
சண்டீகர்: நடப்பு ஐபிஎல் தொடரின் 18-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.
இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பந்துவீசிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் பறக்கவிட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்களால் அந்த அணி 205 ரன்களைக் குவித்தது.
அடுத்து களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயித்த 206 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்களை மட்டுமே திரட்டியது.
இதன்மூலம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் இரண்டாவது வெற்றியை ருசித்தது.