செய்திகள் :

ரோலர் கோஸ்டரில் சென்ற இளம்பெண் கீழே விழுந்து பலி!

post image

தில்லியில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவின் ரோலர் கோஸ்டரில் சென்ற இளம்பெண் கீழே விழுந்து பலியானார்.

தில்லியின் தென்மேற்கில் உள்ள கபஷேரா பகுதியில் தனியார் பொழுதுபோக்கு பூங்கா அமைந்துள்ளது. இந்தப் பூங்காவுக்கு கடந்த வியாழனன்று தனது நண்பருடன் சென்ற பிரியங்கா என்ற 24 வயது இளம்பெண் ரோலர் கோஸ்டரில் பயணித்துள்ளார்.

அப்போது, அவர் ரோலர் கோஸ்டரில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதனால், அவரது உடலில் காதுகள், மூக்கு, கால்கள், கைகள் என பல இடங்களில் கடுமையான காயங்கள் ஏற்பட்டது.

அவரின் நண்பர் உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்குப் பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இயந்திரங்களை அலட்சியமாக இயக்குதல், அலட்சியமான நடத்தையால் மரணம் ஏற்படுத்துதல் போன்ற பிரிவுகளின் கீழ் பொழுதுபோக்கு பூங்கா மீதும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீதும் கபஷேரா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க | பாம்பன் புதிய பாலம்: பிரதமர் திறந்து வைத்தார்!

மசூதியில் காவிக் கொடிகளுடன் ஏறி கோஷமிட்ட ஹிந்து அமைப்பினர்!

உத்தரப் பிரதேசத்தில் உள்ள மசூதியில் ஹிந்து அமைப்பினர் காவிக் கொடிகளுடன் ஏறியதால் பதற்றம் நிலவியது. ஹிந்துக்களின் பண்டிகையான ராம நவமி நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், உத்தரப் பிரதே... மேலும் பார்க்க

சுத‌ர்​ச‌ன் ப‌ட்நா​ய‌க்​கி‌ற்கு பிரி‌ட்டனி‌ல் சா‌ண்‌ட் மா‌ஸ்​ட‌ர் விருது!

​உ​ல​க‌ப் புக‌ழ்​ù‌ப‌ற்ற‌ மண‌ல் சி‌ற்​ப‌க் கலை​ஞ‌ர் சுத‌ர்​ச‌ன் ப‌ட்நா​ய‌க்​கி‌ற்கு பிரி‌ட்​ட​னி‌ல் 'ஃபிரெ‌ட்டாரி‌ங்​ட‌ன் சா‌ண்‌ட் மா‌ஸ்​ட‌ர்' விருது வழ‌ங்​க‌ப்​ப‌ட்​டு‌ள்​ளது.பிரி‌ட்​ட​னி‌ல் உ‌ள்ள டா... மேலும் பார்க்க

போா்ச்சுகல், ஸ்லோவாகியா நாடுகளுக்கு குடியரசுத் தலைவா் அரசுமுறை பயணம்!

போா்ச்சுகல், ஸ்லோவாகியா ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்கு 4 நாள்கள் அரசுமுறை பயணமாக குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் சென்றாா். இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான அமெரிக்காவின் கடுமைய... மேலும் பார்க்க

மசூதியில் ஜெலட்டின் குச்சிகளை வெடிக்க வைத்த இருவா் மீது பயங்கரவாத வழக்கு

மகாராஷ்டிர மாநிலத்தில் மசூதியில், பாறைகளைத் தகா்க்க பயன்படுத்தும் ஜெலட்டின் குச்சிகளை வெடிக்க வைத்த வழக்கில் கைதான இருவா் மீதும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய... மேலும் பார்க்க

ராம நவமி: நாடு முழுவதும் கொண்டாட்டம்!

கடவுள் ராமா் அவதரித்த ராம நவமி தினம் (ஏப்.6) நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமா் கோயிலில் குழந்தை ராமரின் நெற்றியில் சூரிய திலகம் ஒளிரும் நிகழ்வ... மேலும் பார்க்க

4 மாதங்களுக்கு பிறகு உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டாா் தல்லேவால்!

பஞ்சாப் விவசாயத் தலைவா் ஜக்ஜீத் சிங் தல்லேவால் 4 மாதங்களுக்கு பிறகு உண்ணாவிரத போராட்டத்தை ஞாயிற்றுக்கிழமை கைவிட்டாா். விவசாயிகளின் விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ உத்தரவாதம் அள... மேலும் பார்க்க