செய்திகள் :

திருமணம் மீறிய உறவு; வேறொரு புதிய தொடர்பால் ஆத்திரம் - பெண்ணை கொடூரமாக தாக்கிய ஆண் நண்பர்

post image

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே தூத்தூர் மீனவ கிராமம் பகுதியைச் சேர்ந்த 34 வயதான பெண் ஒருவர், கணவன் மற்றும் 2 பிள்ளைகளுடன் வசித்துவருகிறார். கணவன் ஆழ்கடலில் தங்கி மீன்பிடி தொழில் செய்துவந்தார். பிள்ளைகள் மற்றும் மாமனாருடன் அந்த பெண் வசித்துவந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பிள்ளைகள் பள்ளிக்குச் சென்றுவிட்டனர், நகைகளை அடகுவைப்பதற்காக மாமனார் வங்கிக்குக்குச் சென்றுவிட்டார். வங்கிக்குச் சென்று திரும்பிவந்த மாமனார்வீடு உள்பக்கமாக பூட்டிக்கிடப்பதை பார்த்தார். திறக்க முயன்றும் முடியவில்லை.

சந்தேகத்தில் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து வீட்டுக்குள் சென்று பார்த்தார். அங்கு அந்த பெண் பிறப்புறுப்பு உள்ளிட்ட பல இடங்களில் காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதுகுறித்து புகாரின்பேரில் நித்திரவிளை போலீஸார் விசாரணை நடத்தினர். அதில் அந்த பெண்ணுக்கும் பூத்துறை பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான முகம்மது இப்ராஹிம்(39) என்பவருக்கும் திருமணம் மீறிய உறவு இருந்ததாகவும், அதன் காரணமாக ஏற்பட்ட பிரச்னையில் வீட்டில் தனியாக இருந்த அந்த பெண்ணை கொடூரமாக தாக்கியதும் தெரியவந்தது.

நித்திரவிளை காவல்நிலையம்

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "அந்த பெண்ணின் கணவன் ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்கச் செல்வதால், பெரும்பாலான நாட்களில் அவர் வீட்டில் தனியாகத்தான் இருப்பார். அத்தியாவசிய தேவைகளுக்கு பொருட்கள் வாங்குவதற்கும், வெளியே செல்வதற்கும் பூத்துறை பகுதியை சேர்ந்த முகம்மது இப்ராஹிமின் ஆட்டோவில் பயணித்து வந்துள்ளார். இதில், இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரித்து, திருமணம் மீறிய உறவாக மாறி உள்ளது. அந்த பெண் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் ஆட்டோ டிரைவரை அழைத்து தனிமையில் இருந்து வந்துள்ளனர். ஆட்டோ டிரைவருடன் மனைவிக்கு தொடர்பு இருக்கும் விவகாரம் கணவருக்கு தெரியவர மனைவியை கண்டித்துள்ளார்.

கை உடைந்த நிலையில் ஆட்டோ டிரைவர் முஹமமது இப்ராஹி.

அதுமட்டும் அல்லாது இன்ஸ்டாகிராம் மூலம் கேரள மாநிலம் பொழியூர் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் அந்த பெண்ணுக்கு புதிய நட்பு கிடைத்துள்ளது. இதன் காரணமாக முஹம்மது இப்ராஹிமுடன் பேசுவதை  குறைத்துக்கொண்டதாக தெரிகிறது. அதே சமயம் அந்த பெண்ணுக்கு இன்ஸ்டாகிராமில் புதிய நண்பன் கிடைத்துள்ளது முஹம்மது இப்ராஹிமுக்கும் தெரியவந்தது. இதற்கிடையேத்தான் அந்தபெண் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த முஹம்மது இப்ராஹிம் பின்பக்க காம்பவுண்ட் சுவரில் ஏறிக்குதித்து அவரது வீட்டுக்குள் சென்றார்.

அப்போது, இன்ஸ்டா காதலுடன் செல்போனில் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்திருக்கிறார் அந்த பெண். இதைபார்த்த முஹம்மது இப்ராஹிம் அந்த பெண்ணிடம் தகராற்றில் ஈடுபட்டதுடன், வலுக்கட்டாயமாக வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். அந்த பெண் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து பெண்ணின் பிறப்புறுப்பை கையாலும், வேறு சில பொருட்களாலும் தாக்கி காயப்படுத்தி விட்டு தப்பி சென்றுள்ளார்" என்றனர்.

இதற்கிடையே நம்பாளி பகுதியில் தலைமறைவாக இருந்த முஹம்மது இப்ராஹிமை போலீஸார் கைது செய்ய முயன்றனர். அப்போது தப்பி ஓட முயன்ற முஹம்மது இப்ராஹிம் கீழே விழுந்து கை முறிந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெட்டப்பட்ட விவசாயி உயிரிழப்பு; போலீஸ் ஸ்டேஷன் முன்பு பாடை கட்டி, ஒப்பாரி போராட்டம் நடத்திய மக்கள்

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள ஆம்பலாபட்டு பகுதியை சேர்ந்தவர் தீர்க்கரசு (54). விவசாயியான இவர் தனது நிலத்தை கிரயம் செய்து கொடுத்து, திருகுமார் என்பவரிடம் ரூ.7 லட்சம் கடன் வாங்கியுள்ளார். பணம... மேலும் பார்க்க

போலி ஆவணம் தயாரித்து பல கோடி மதிப்பிலான நிலம் மோசடியா? - போராட்டத்தில் விவசாயிகள்- நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே வள்ளிபுரத்தில் அமாவாசை என்பவருக்குச் சொந்தமான 2.97 ஏக்கர் நிலம் மோகனமூர்த்தி, சரவணக்குமார் ஆகிய சகோதரர்கள் இருவருக்கு கடந்த 2013-ஆம் ஆண்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது.... மேலும் பார்க்க

`மேடம், தம்பியை விட்டுருங்க ப்ளீஸ்'- போலீஸ் ஸ்டேஷன் முன் விஷம் குடித்த சகோதரிகள்; ஒருவர் உயிரிழப்பு!

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே உள்ள நடுக்காவேரி கிராமத்தை சேர்ந்தவர் அய்யாவு. இவருக்கு துர்கா (31), மேனகா (29), கிருத்திகா (27), தினேஷ் (25) என நான்கு பிள்ளைகள். இந்த நிலையில் மது விற்பனை தொடர்ப... மேலும் பார்க்க

`பொம்மை தரேன்’ - 10 வயது சிறுமி, சிறார்வதை செய்யப்பட்டு 6வது மாடிலிருந்து தூக்கி வீசப்பட்ட கொடூரம்

மும்பை அருகில் உள்ள மும்ப்ராவில் உள்ள 10 மாடி குடியிருப்பில் இரவு திடீரென மிகப்பெரிய சத்தம் கேட்டது. உடனே கட்டடத்தில் வசிப்பவர்கள் வெளியில் வந்து என்னவென்று டார்ச் லைட் அடித்து பார்த்தனர். இதில் 10 வய... மேலும் பார்க்க

புதுச்சேரி: `மக்கள் ஏமாந்தது அவர்களுக்கே தெரியவில்லை!’ - `கோ ஃப்ரீ சைக்கிள்’ மோசடி குறித்து போலீஸ்

பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்ட `கோ ஃபிரீ சைக்கிள்’ (Go Free Cycles) என்ற சைக்கிள் நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரியில் தன்னுடைய அலுவலகத்தை திறந்தது. அதே வேகத்தில், `புதுச்சேரி வரும் சுற்ற... மேலும் பார்க்க

கோவை: பூட்டிய வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட 2 ஆண்கள்; விசாரணையில் வெளியான பின்னணி என்ன?

கேரள மாநிலம், கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜெயராஜ் (54) மற்றும் மகேஷ் (45). இருவரும் இணைந்து கோவை மாவட்டம், துடியலூர் பகுதியில் பேக்கரி நடத்தி வந்தனர். கடந்த இரண்டு நாள்களாக பேக்கரி திறக்கப்படவி... மேலும் பார்க்க