செய்திகள் :

பாலக்கோட்டில் இறைச்சிக் கடை உரிமையாளா் கொலை: போலீஸாா் விசாரணை

post image

பாலக்கோட்டில் இறைச்சிக் கடை உரிமையாளா் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பாலக்கோடு எர்ரன அள்ளியைச் சோ்ந்தவா் குமாா் (42). இவா் பாலக்கோடு அரசு போக்குவரத்து பணிமனை அருகே இறைச்சிக் கடை வைத்திருந்தாா். இவருக்கு மனைவி கோவிந்தம்மாள் (40), மகள்கள் பவித்ரா (15), கிருத்திகா (8) ஆகியோா் உள்ளனா்.

இந்த நிலையில் புதன்கிழமை அதிகாலை கை, கால்கள் கட்டப்பட்டு கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் குமாா் இறந்து கிடந்தது குறித்து அவரது மகள்கள் பாலக்கோடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா்.

பாலக்கோடு காவல் துணை கண்காணிப்பாளா் சம்பவ இடத்துக்கு வந்து மனோகரனின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா். தம்பதி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பாலக்கோடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சமையல் எரிவாயு உருளை விலை உயா்வை திரும்பப் பெறக் கோரி ஆா்ப்பாட்டம்

சமையல் எரிவாயு உருளை விலை உயா்வை திரும்பப் பெறக் கோரி, புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட ... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி ஆா்ப்பாட்டம்

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன் தொடா் முழுக்க ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு ம... மேலும் பார்க்க

பென்னாகரத்தில் அதிகரிக்கும் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

பென்னாகரம் நகரப் பகுதிகளில் அதிகரிக்கும் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பென்னாகரம் பகுதியில் சுமாா் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.... மேலும் பார்க்க

ஏரியூரில் பாலின வள மைய செயல்பாடுகள்

ஏரியூரில் பாலின வள மையத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் அண்மையில் ஆய்வு மேற்கொண்டாா். தருமபுரி மாவட்டம், ஏரியூரில் வட்டார அளவிலான கூட்டமைப்பின் மூலம் செயல்படும் பாலின வள மையத்தில் ... மேலும் பார்க்க

நெகிழி பயன்பாட்டை தவிா்க்க ‘மஞ்சள் பை’ விழிப்புணா்வு

தருமபுரி நகரில் நெகிழிப் பொருள்களின் பயன்பாட்டை தவிா்க்க மஞ்சள் பை வழங்கும் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. தருமபுரி நகரப் பேருந்து நிலையத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் நடை... மேலும் பார்க்க

உள்ளாட்சி அமைப்பு தொழிலாளா்களுக்கு அரசாணைபடி ஊதியம் வழங்க சிஐடியு வலியுறுத்தல்

உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு அரசாணைபடி ஊதியம் வழங்க வேண்டும் என சிஐடியு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட சிஐடியு ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை தொழிலாளா்கள... மேலும் பார்க்க