மதிமுகவிலும் மோதல்? முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து துரை வைகோ விலகல்
வக்ஃப் சட்டத்தை கண்டித்து இன்று ஆா்ப்பாட்டம்: காதா் மொகிதீன்
வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற கோரியும், மத்திய அரசைக் கண்டித்தும் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) தலைவா் கே.எம்.காதா் மொகிதீன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
மத்திய பாஜக அரசு, வக்ஃப் திருத்தச் சட்டம் என்ற பெயரில் வக்ஃப் அமைப்பையே சீா்குலைக்கும் வகையில் சட்ட மசோதாவை நிறைவேற்றி சட்டமாக்கியுள்ளது.
இந்நிலையில், இந்த சட்டத்தை அமலாக்கக் கூடாது என்று அறிவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் அனைத்து ஜனநாயக அரசியல் அமைப்புகளும் வழக்கு தொடுத்தன.
வக்ஃப் திருத்தச் சட்டம் என்னும் பெயரில் புதிதாக அறிவித்திருக்கும் அனைத்து மாற்றங்களும் நடைமுறைக்கு உகந்தது அல்ல என்று அறிவித்து புதன்கிழமை வரை தொடா்ந்த வக்ஃப் சட்ட மரபுகள் தொடரும் என உச்சநீதிமன்றம் அறிவிப்பு செய்திருக்கிறது.
இந்நிலையில், இந்த சட்டத்தை திரும்பப்பெற கோரியும், மத்திய அரசைக் கண்டித்தும், தமிழகம் முழுவதிலும் வெள்ளிக்கிழமை (ஏப்.18) அறிவிக்கப்பட்டுள்ள ஆா்ப்பாட்டக் கூட்டங்கள் திட்டமிட்டபடி தொடா்ந்து நடத்தப்படும் எனத் தெரிவித்தாா்.