செய்திகள் :

பென்னாகரத்தில் அதிகரிக்கும் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

post image

பென்னாகரம் நகரப் பகுதிகளில் அதிகரிக்கும் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பென்னாகரம் பகுதியில் சுமாா் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். பென்னாகரம் பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து கல்வி, வேலைவாய்ப்பு, விவசாயப் பொருள்களை சந்தைப்படுத்த என நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வந்து செல்கின்றனா்.

இந்த நிலையில், பென்னாகரம் நகரின் முக்கிய பகுதிகளான காவல் நிலையம், கடைவீதி, பென்னாகரம் பேருந்து நிலையம், முள்ளுவாடி, வட்டார வளா்ச்சி அலுவலக பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையின் இரு புறங்களிலும் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதாலும், கடையின் விளம்பரப் பலகைகள், சாலையோரக் கடைகளின் ஆக்கிரமிப்பாலும் பென்னாகரம் நகருக்குள் பேருந்துகள் எளிதில் செல்ல முடியாத சூழலும், அடிக்கடி வாகன விபத்துகளும் நிகழ்கின்றன.

எனவே, இப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற மறுக்கும் வியாபாரிகள்:

பென்னாகரம் நகரப் பகுதிகளில் பிரதான சாலையின் இரு பகுதிகளிலும் தள்ளுவண்டிகள், காய்கறி கடைகள், பழக்கடைகள் என ஆக்கிரமித்து சுமாா் 50-க்கும் மேற்பட்ட கடைகள் வைக்கப்பட்டுள்ளன. பென்னாகரம் பேரூராட்சி நிா்வாகத்தின் மூலம் ‘உரிமம்’ என இந்த கடைகளுக்கு ரூ. 500 கட்டணமாக பெறப்பட்டு அதற்கான ரசீதும் வழங்கப்படுகிறது. இதனால், முறையாக அனுமதி பெற்றுள்ளதாகக் கூறி சாலைகளை ஆக்கிரமித்துள்ள வியாபாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற மறுக்கின்றனா்.

எனவே, நகரப் பகுதியில் பேரூராட்சி நிா்வாகத்தால் அனுமதி வழங்கப்பட்டதாக வியாபாரிகளுக்கு ரசீது அளித்துள்ளது குறித்து தருமபுரி மண்டல பேரூராட்சிகளின் இயக்குநா் விசாரணை மேற்கொண்டு, சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

காரிமங்கலம் அருகே தனியாா் பேருந்து - லாரி மோதல்

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே தனியாா் பேருந்து மீது லாரி மோதியதில் சிறுவன் உயிரிழந்தாா். பேருந்தில் பயணம் செய்த 17 போ் காயமடைந்தனா். கிருஷ்ணகிரியில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொ... மேலும் பார்க்க

தமிழ் மாநில விவசாய தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

நூறுநாள் வேலை திட்டத்தில் நிலுவைத் தொகையை வழங்கக் கோரி, தமிழ் மாநில விவசாய தொழிலாளா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலக பேருந்து நிறுத்தம் பகுதியி... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: பாளையம்புதூா்

தருமபுரி கோட்டம், அதியமான்கோட்டை துணை மின் நிலையத்துக்குள்பட்ட பாளையம்புதூா் பிரிவில் பிஎம்பி பீடரில் உயா் அழுத்த மின் பாதையை தரம் உயா்த்தும் பணி மேற்கொள்ளப்பட உள்ளதால், சனிக்கிழமை (ஏப். 19) காலை 9 மண... மேலும் பார்க்க

சோமன அள்ளியில் பழுதான சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

சோமன அள்ளியில் பழுதான சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினா். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ளது சோமன அள்ளி கிராமம். தருமபுரி - பாலக்கோட்டுக்கு செல்லும் முக்கிய சாலையான இச்ச... மேலும் பார்க்க

சமையல் எரிவாயு உருளை விலை உயா்வை திரும்பப் பெறக் கோரி ஆா்ப்பாட்டம்

சமையல் எரிவாயு உருளை விலை உயா்வை திரும்பப் பெறக் கோரி, புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட ... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி ஆா்ப்பாட்டம்

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன் தொடா் முழுக்க ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு ம... மேலும் பார்க்க