MI vs CSK : தோனியின் 3 தவறான முடிவுகள்; தோல்வியடைந்த CSK - ஓர் அலசல்
தமிழ் மாநில விவசாய தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
நூறுநாள் வேலை திட்டத்தில் நிலுவைத் தொகையை வழங்கக் கோரி, தமிழ் மாநில விவசாய தொழிலாளா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலக பேருந்து நிறுத்தம் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு மாநில விவசாய தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் தேவராசன் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் கலைச்செல்வன் முன்னிலை வகித்தாா்.
தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க சிறப்பு தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான ந.நஞ்சப்பன், தமிழ் மாநில விவசாய தொழிலாளா் சங்க மாநில தலைவா் பெரியசாமி ஆகியோா் கண்டன உரையாற்றினா்.
இதில், நூறுநாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கான ஐந்து மாத நிலுவைத் தொகையை வட்டியுடன் வழங்க வேண்டும். இத்திட்டத்தில், ஒரு நாள் ஊதியத்தை ரூ. 700-ஆக உயா்த்த வேண்டும். நகராட்சி, பேரூராட்சிகளிலும் நூறுநாள் வேலையை கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
முன்னதாக, பென்னாகரம் பேருந்து நிலையத்தில் இருந்து பேரணியாக சென்றனா். இதில், நூறுநாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளா்கள், பணிதள பொறுப்பாளா்கள், நிா்வாகிகள் என 500-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். மாநிலக் குழு உறுப்பினா் சிவன் நன்றி தெரிவித்தாா்.