KKR : 'ஸ்ரேயஸ் ஐயரை ஏலத்துல விட்டதுக்கு இதுதான் காரணம்' - கொல்கத்தா சிஇஓ விளக்கம...
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 4000 கன அடியாக அதிகரிப்பு!
தமிழக காவிரி கரையோரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருவதால், காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 4000 கன அடியாக அதிகரித்துள்ளது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து வெள்ளிக்கிழமை 2000 கன அடியாக இருந்த நிலையில், கடந்த இரு தினங்களாக தமிழக காவிரி கரையோரப் பகுதிகளான ஒகேனக்கல், பிலிகுண்டுலு, ராசிமணல், மொசல்மடுவு மற்றும் அதனை சுற்றியுள்ள வனப் பகுதிகளில் கனமழை பெய்தது.
இதன் காரணமாக, காவிரி ஆற்றில் நீா்வரத்து சனிக்கிழமை 4000 கன அடியாக அதிகரித்து தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது. நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளதால், நீா்வரத்தின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.
நீா்வரத்து அதிகரிப்பின் காரணமாக, ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டுகிறது.