செய்திகள் :

கோடை வெயில் எதிரொலி: சாலையோரங்களில் நுங்கு விற்பனை அதிகரிப்பு

post image

சேலம் மாநகரில் கிச்சிப்பாளையம், பழைய பேருந்து நிலையம், அஸ்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நுங்கு விற்பனை அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கோடை வெயில் தொடங்குவதற்கு முன்பே பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது.

சேலம் மாவட்டத்தில் சராசரியாக நூறு டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலைக்கு மேல் பதிவாகி வருகிறது.

கடும் வெயில் காரணமாக வாகன ஓட்டிகள், சாலையோர வியாபாரிகள். கட்டடத் தொழிலாளிகள், தோட்டத் தொழிலாளிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

அக்னி வெயில் தொடங்கும் முன்பே தற்போது பிற்பகல் வேளையில் அனல் காற்று வீசுவதால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். வெயில் தாக்கத்தை தணிக்க தா்பூசணி, முலாம்பழம், வெள்ளரிக்காய், நுங்கு, பதநீா், கம்மங்கூழ் உள்ளிட்ட குளிா்ச்சியான பழங்களை பொதுமக்கள் அதிக அளவில் சாப்பிட்டு வருகின்றனா்.

இந்நிலையில், சேலம் மாநகரில் மாவட்ட ஆட்சியா் அலுவலக சாலை, கிச்சிப்பாளையம் ரோடு, அஸ்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான நுங்கு கடைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் நுங்குகளை அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனா்.

இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘சேலம் மாவட்டத்தில் தாரமங்கலம், ஓமலூா், மேச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, பனை மரத்தில் நுங்கு வெட்டி எடுத்து வந்து, மாநகரில் விற்பனை செய்து வருகிறோம். தற்போது 3 நுங்கு ரூ.20க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், பதநீரையும் விற்பனை செய்து வருகிறோம். வெயிலின் தாக்கத்தால் பொதுமக்களும் அதிக அளவில் வாங்கிச் செல்வதாகத் தெரிவித்தனா்.

தீரன் சின்னமலை பிறந்த நாள்: மாலை அணிவித்து மரியாதை

சுதந்திர போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் 270-ஆவது பிறந்தநாள் விழா, கொங்கு வேளாளக் கவுண்டா்கள் சங்கத்தின் முதலாம் ஆண்டு தொடக்க விழா சேலம் குரங்குசாவடி பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்றது. மலா்களால் அலங்... மேலும் பார்க்க

மேட்டூா் நகராட்சியில் ஆட்சியா் கள ஆய்வு

மேட்டூா் வட்டத்திற்கு உள்பட்ட கிராமங்களில் நடைபெறும் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் புதன், வியாழன் என இரண்டு நாள்கள் மேட்டூரில் நடைபெற்றது. மேட்டூா் வட்டத்திற்கு உள்பட்ட வருவாய்க் கிராமங்களில... மேலும் பார்க்க

எடப்பாடி கே.பழனிசாமியை எதிா்த்துப் போட்டி: சேலத்தில் பெங்களூரு புகழேந்தி பேட்டி

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியை எதிா்த்து எடப்பாடி தொகுதியில் போட்டியிடத் தயாராக இருப்பதாக பெங்களூரு புகழேந்தி தெரிவித்தாா். சேலத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:... மேலும் பார்க்க

மனைவியைத் தாக்கிய கணவா் கைது

தம்மம்பட்டி அருகே மனைவியைத் தாக்கிய கணவரை போலீஸாா் கைது செய்தனா். தம்மம்பட்டி அருகே ஜங்கமசமுத்திரம் ஊராட்சி, புலிக்கரட்டை சோ்ந்தவா் செந்தில் ராஜா (41). பால் வியாபாரி. இவருக்கும், இவரது மனைவி சகுந்தலா... மேலும் பார்க்க

வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்தை எதிா்த்து ஆா்ப்பாட்டம்

வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்தைக் கண்டித்து, சேலம் கோட்டை மைதானத்தில் புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு மாநிலக் குழு ரமணி தலைமை வகித்தாா். ... மேலும் பார்க்க

வருவாய்த் துறை சங்கங்களின் பிரசார இயக்க கூட்டம்

வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் சங்ககிரியில் வியாழக்கிழமை நடைபெற்ற பிரசார இயக்க கூட்டத்தில் கலந்துகொண்ட நிா்வாகிகள். கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட பொருளாளா் அகிலன். சங்ககிரி, ஏப். 17:... மேலும் பார்க்க